donderdag 15 augustus 2013

தாக்குதல் நடத்தியவர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு பாடகர் தம்பதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

இந்தியாவின் 67வது சுதந்திர தினம்! யாழ்.துணைத் தூதரகத்திலும் கொண்டாட்டம்!
[ வியாழக்கிழமை, 15 ஓகஸ்ட் 2013, 09:56.00 AM GMT ]
இந்தியாவின் 67வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் துணைத் தூதுவர் வி.மகாலிங்கம் தலைமையில் இன்று நடைபெற்றன.
இந்தியாவின் தேசியக் கொடியினை துணைத் தூதுவர் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து இந்திய ஜனாதிபதியால் மக்களுக்கு ஆற்றப்படும் உரையினை தூதுவர் வாசித்தார்.
தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மக்களுக்கு தூதுவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் தங்கியுள்ள இந்தியாவின் புகையிரத கட்டமைப்பு நிறுவனமாக இர்க்கோன் நிறுவன அதிகாரிகள், மற்றும் இந்தியன் வங்கியின் அதிகாரிகள் மற்றும்  இந்தியப் பிரஜைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

தாக்குதல் நடத்தியவர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு பாடகர் தம்பதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை!
[ வியாழக்கிழமை, 15 ஓகஸ்ட் 2013, 09:47.14 AM GMT ]
தமது இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று பாடகர் தம்பதிகாளான ரூகாந்த மற்றும் சந்திரலேகா ஆகியோர் விடுத்த கோரிக்கை கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
2000ம் ஆண்டு இடம்பெற்ற அச்சுறுத்தல் மற்றும் வீட்டின் மீதான தாக்குதல் தொடர்பில் நீதிமன்றில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 10 பேருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் ஜனாதிபதியை நேற்று சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதா இல்லையா என்பது தொடர்பாக ஜனாதிபதி தீர்மானிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம்  செவ்வாய்க்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாடக தம்பதிகள் தமக்கும், உடைமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய அனைவருக்கும் மன்னிப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.
நேரடியான குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் தாம் திருப்தியடைவதாகவும், உண்மையான பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிவதாகவும் குறிப்பிட்டனர்.
எனவே, இது குறித்து தொடர்ந்தும் நெருக்கடிகளை எதிர்நோக்காது பொதுமன்னிப்பு வழங்குவது உசிதம் என்று எண்ணியதாக ரூகாந்த மற்றும் சந்திரலேகா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten