maandag 5 augustus 2013

முஸ்லிம் தலைவர்கள் கோத்தபாயவை பாராட்டியுள்ளனர்- முஸ்லிம் தீவிரவாத அமைப்பொன்று யாழ்ப்பாணத்தில் முகாம் !


இலங்கையின் முஸ்லிம் சமூகத்தலைவர்கள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்
இந்த தகவலை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற இர்தார் நிகழ்வு ஒன்று கொழும்பு ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றது.
இதில் கோத்தபாய ராஜபக்சவும் பங்கேற்றார்.
இதன்போது கருத்துரைத்த முஸ்லிம் தலைவர்கள் சமூக பிரச்சினைகளை தீர்ப்பதி;ல் கோத்தபாய ராஜபக்ச காட்டிவரும் முனைப்பை பாராட்டியதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முஸ்லிம் தீவிரவாத அமைப்பொன்று யாழ்ப்பாணத்தில் முகாம்- றோ
முஸ்லிம் தீவிரவாத அமைப்பொன்று யாழ்ப்பாணத்தில் முகாமிட்டுள்ளதாக இந்திய உளவுப் பிரிவான றோ அறிவித்துள்ளது.
லக்‌ஷர் ஈ தொய்பா என்ற தீவிரவாத அமைப்பே இவ்வாறு யாழ்ப்பாணத்தில் முகாமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் முகாம் அமைத்து அங்கிருந்து இந்தியா மீது தாக்குதல் நடாத்த உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தத் தீவிரவாத இயக்கம் 2008ம் ஆண்டில் மும்பையில் பாரிய தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Geen opmerkingen:

Een reactie posten