zondag 11 augustus 2013

கிராண்ட்பாஸ் சம்பவத்திற்கும் தமது அமைப்புகளுக்கும் தொடர்பில்லை: பொதுபல சேனா, ராவண சக்தி, சிங்கள ராவய !


கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தின் சுவர்ண சயித்ய வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கும் தமது அமைப்புகளுக்கு எந்த தொடர்பும் இல்லையென பொதுபல சேனா, ராவண சக்தி மற்றும் சிங்கள ராவய தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர்,
தாம் உட்பட பலர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் அத்துடன் எமது அமைப்பிற்கும் இந்த சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனத் தெரிவித்தார்.
அதேவேளை சிங்கள ராவய அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் மெடில்லே ஞானலோக தேரர் கூறுகையில்,
தாங்கள் இந்து, முஸ்லிம் மக்களுடன் நெருக்கமாக இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் நேற்று நடந்த இந்த சம்பவம் தொடர்பாக தாம் ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
'ராவண பலய" அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் கூறுகையில்,
தமது அமைப்பின் எந்தவொரு உறுப்பினரும் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டில்லை எனவும் தமது அமைப்பு ஒருபோதும் பிற மத மக்களை துன்புறுத்தியதில்லையெனவும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten