woensdag 7 augustus 2013

யாழ்தேவியின் கிளிநொச்சி வரையான பரீட்சார்த்த பயணம் வெற்றி!

நவுறு தீவில் உள்ளவர்கள் தொடர்பு துண்டிப்பென மட்டக்களப்பிலுள்ள உறவினர்கள் கவலை
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 07:47.41 AM GMT ]
இலங்கையிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றடைந்து நவுறு தீவில் தங்க வைக்கப்பட்டிருந்த தமது உறவினர்களுடன் இரு வாரங்களுக்கு மேலாக தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் உறவினர்கள் கவலையும், கலக்கமும் அடைந்துள்ளனர்.
கடந்த யூலை மாதம் 19ம் திகதி அவுஸ்திரேலிய புகலிட கோரிக்கையாளர்கள் நவுறுதீவில் தங்கியிருந்த முகாமில் இடம் பெற்ற கலவரத்தின் பின்னரே அவர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி சென்று நவுறுதீவில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினரான பெண்ணொருவர் இது பற்றி தெரிவிக்கையில்!
தனது சகோதரர்கள் இருவர் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றடைந்த போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான போது அவுஸ்திரேலிய விமானப் படை மற்றும் கடற்படையால் காப்பாற்றப்பட்டதாக கூறினார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்!
ஒரு வருட காலம் நவுறு தீவில் தங்க வைக்கப்பட்டிருந்த காலத்தில் தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடுவது வழக்கம் ஆகும். ஆனால் கடந்த 23ம் திகதிக்கு பின்னர் தொடர்புகள் இல்லை.
இறுதியாக தொடர்பு கொண்ட போது நவுற தீவு கலவரத்தில் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறி தங்களை அங்கு வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப் போவதாக இறுதியாக கூறினார்கள்.
அந்த இடத்தில் தொலைபேசி வசதிகள் இருக்குமானால் தொடர்பு கொள்வதாக கூறினார்கள். ஆனால் இரண்டு வாரங்களாகியும் இதுவரை தொடர்பு இல்லை. அவர்கள் எங்கே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்? அவர்களுக்கு என்ன நடந்திருக்கும்? என குழப்பத்துடன் இப்போ நாங்கள் இருக்கின்றோம்.
இந்த பயணத்திற்கு சுமார் இருபது இலட்சம் ரூபா வரை காணி மற்றும் நகைகளை அடகு வைத்தும் வட்டிக்கு கடன் பெற்றும் அவர்களை அனுப்பி வைத்தோம். அப்படி அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைத்தால் தங்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது என்றும் அவர் கூறினார்;.
மற்றுமோர் 53 வயதான பெண்ணொருவர் இது தொடர்பாக கூறுகையில்!
23.07.2013 அன்று தனது மகன் கடைசியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அம்மா பத்து பத்து பேராகவே தொலைபேசியில் கதைக்க அனுமதித்துள்ளார்கள். நவுறு தீவிலுள்ள வேறு முகாமொன்றுக்கு இடமாற்றம் செய்ய போகின்றார்களாகவும், அங்கு தொலைபேசி வசதிகள் இருந்தால் தான் தொடர்பு கொள்ள முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால் இதுவரை தொடர்பு இல்லை. சென்ற ஆகஸ்ட் மாதம் தொடக்கம் தனது மகன் நவுறுதீவில் தங்கியிருந்த காலத்தில் தினமும் இரு தடவைக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்வார். ஆனால் இப்போது தொடர்புகள் இல்லாத நிலையில் உளரீதியாக நான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன்.
சிலவேளை இவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைப்பதற்கான வாய்ப்பு இருக்கலாம் என சிலர் கூறினாலும் கடன் சுமை மற்றும் வேறு சில நெருக்கடிகள் காரணமாக அடுத்தது என்ன? என ஊகித்துக் கொள்ள முடியாத நிலை என்று தனது மகன் தொடர்பாகக் கூறினார்.

யாழ்தேவியின் கிளிநொச்சி வரையான பரீட்சார்த்த பயணம் வெற்றி
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 07:41.31 AM GMT ]
வடக்கிற்கான ரயில்தடம் அமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் கிளிநொச்சி வரையான பரீட்சார்த்த ரயில் பயணம் வெற்றியளித்துள்ளது.
கிளிநொச்சி, அறிவியல் நகர்வரை பரீட்சார்த்த நடவடிக்கையாக ரயில் சேவை ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மாலை வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த ரயில், அறிவியல் நகர் வரை வந்தடைந்தது.

இது இவ்வாறிருக்க, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கிளிநொச்சிக்கு உத்தியோகபூர்வமான பயணிகள் ரயில் சேவை ஆரம்பமாகும் என ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மாங்குளம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் ஏற்கெனவே இரயில் நிலையங்கள் இருந்த இடங்களில் புதிதாக இரயில் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகளும் துரிதமாக நடை பெறுகின்றன.

Geen opmerkingen:

Een reactie posten