பக்றீரியா தொற்று இருக்குமானால் உற்பத்தி பொருட்களை மீளப்பெறுமாறு ‘பொன்டேரா’ முகவர்களுக்கு அறிவுறுத்தல்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 12:40.53 AM GMT ]
இதன்படி தமது பால் உற்பத்திகளில் கலந்திருப்பதாக கூறப்படும் பக்றீயாக்கள், காலம் செல்லும் போது நச்சுத்தன்மையை அடையும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பல நோய்களுக்கு வித்திடக்கூடும் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே பால்மாக்களில் பக்றீரியா தொடர்பான உண்மை பரிசோதனைகளின் போது தெரியவந்தால் உற்பத்திப் பொருட்களை மீளப்பெற்றுக் கொள்ளுமாறு பொன்டேரா தமது முகவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பொன்டேராவுக்கு உலகளாவிய ரீதியில் இலங்கை உட்பட்ட 8 நாடுகளில் முகவர்கள் செயற்படுகின்றனர்.
இதேவேளை நியூஸிலாந்தின் வர்த்தக்கத்துறை அமைச்சர் டிம் குரோசர் பால் உற்பத்திகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் உட்பட்ட அதிகாரிகளுக்கு அவசர அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.
நவநீதம்பிள்ளையின் பயணத்தின்போது கட்டுப்பாடுகள் இல்லை: அரசாங்கம்- விசாரணை நடாத்தவே இலங்கைக்கு விஜயம்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 01:20.47 AM GMT ]
ஏற்கனவே தாம் நவநீதம்பிள்ளையை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து பேசப்போவதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம, நவநீதம்பிள்ளையின் பயண ஒழுங்குகளை இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கை அரசாங்கமும் மேற்கொள்வதாக குறிப்பிட்டார்.
அதேநேரம் சரத் பொன்சேகா நவநீதம்பிள்ளையை சந்திக்க எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே நவநீதம்பிள்ளையின் பயணம் குறித்த ஒழுங்குகளை மேற்கொள்ள இலங்கை வந்திருந்த அவரின் பாதுகாப்பு ஆலோசகர் ஆபிரஹாம் மாத்தாய், நவநீதம்பிள்ளையின் பயணத்தின் போது இலங்கை அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது. விதிக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
விசாரணை நடாத்தவே நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம்
விசாரணை நடாத்தும் நோக்கிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்வதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மாதம் 26ம் திகதி நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தல், வடக்கு இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்றம், யுத்த வலயத்தில் பௌத்த விஹாரைகள் அமைத்தல், புலிகளின் நினைவுத் தூபிகள் அகற்றப்பட்டமை, மனித உரிமை மீறல்கள், யாழ்ப்பாண புலி ஆதரவு மாணவர்கள் மாவீர்ர் தின நிகழ்வுகளை நடாத்த அனுமதிக்காமை, ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளனவா என்பன குறித்து நவனீதம்பிள்ளை விசாரணை நடாத்த உள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் நவனீதம்பிள்ளை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றை நவனீதம்பிள்ளை சமர்ப்பிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten