தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 12 augustus 2013

யாழில் புதுவிதமான போதைப் பொருள்: "போதைப் பாக்கு" என்கிறார்கள் !

பாடசாலை மாணவர்கள் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பாக்கு நுகரும் கலாசாரம் ஒன்றை ஏற்படுத்தவென தீவிர முயற்சிகள் திட்டமிட்டமுறையில் மேற்கொள்ளப்பட்டு வருவது அம்பலமாகிவருகிறது. இனந்தெரியாத கும்பல் ஒன்றின் ஏற்பாட்டினால் விநியோகிக்கப்படும் போதை, கலந்த பாக்குப் பொருள்கள் "பிரமிட்" வடிவத்தில் மாணவர்களைச் சென்றடைகின்றதாக அறியமுடிகின்றது. இவ்வாறான பொருள்கள் பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலைய மாணவர்களை இலக்கு வைத்து இலவசமாக விநியோகிக்கப்படுவதாகவும் மாணவர்கள் அறிந்தும் அறியாமலும் அவற்றை வாங்கி உட்கொண்ட பின்னர் அவஸ்தைப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழ் மக்கள் சமூகத்தை நிலைகுலையச் செய்வதற்காக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறுபட்ட திட்டமிட்ட நாசகார செயலின், இறுதிக்கட்ட ஆயுதமாகவே இப்போதைப் பாக்கு விடயம் கையாளப்பட்டுவருவதாக புத்திஜீவிகள் தரப்பில் பரவலாக கதைக்கப்பட்டு வருகிறது. 

அதிகரித்துவரும் போதைப் பாக்கு விடயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொறிமுறை உரியமுறையில் மேற்கொள்ளப்படுவதற்கு அரச உயர் அதிகாரிகள் பொலிஸ் பிரிவினர் மதுவரி உத்தியோகத்தர்கள் சிறுவர் நல உத்தியோகத்தர்கள் சிறுவர்களுக்கான உரிமைகளை பாதுகாக்கும் சட்ட நீதித் துறையினர் பாடசாலை சமூகத்தினர் கல்வித்துறையினர் என இவர்கள் அனைவரதும் அர்ப்பணிப்பான சேவை மிகவும் அவசியமானதாகும்.

Geen opmerkingen:

Een reactie posten