zaterdag 10 augustus 2013

பள்ளிவாசல் தாக்குதல்: கொழும்பு, கிரண்ட்பாஸில் ஊரடங்கு

grandpass mosque
கொழும்பு - கிரான்ட்பாஸ் கொஸ்கஸ் சந்திபிரதேசத்தில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்று தாக்கப்பட்டதனையடுத்து அந்தப் பிரதேசத்தில்
நாளை (11) காலை மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் ஏற்பட்ட மோதலில் இரு பொலிஸார் உள்ளிட்ட சிலர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதிகமாக முஸ்லிம் மக்களை கொண்ட இப்பகுதியில் வீடுகள் மற்றும் மதஸ்தலம் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten