donderdag 15 augustus 2013

தேர்தல் நீதியாகவும் நியாயமானதாகவும் நடைபெற வேண்டும்: இந்தியா அழுத்தம்

ரத்துபஸ்வல சம்பவம் குறித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும்
[ வியாழக்கிழமை, 15 ஓகஸ்ட் 2013, 03:51.53 AM GMT ]
வெலிவேரிய, ரத்துபஸ்வல சம்பவம் குறித்த்த அறிக்கை அடுத்த வாரத்தில் வெளியிடப்பட உள்ளது.
சுற்றாடல் அமைச்சிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கட்டிட ஆய்வு மற்றும் சுரங்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 5ம் திகதிக்கு முன்னதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் பேர்னாட் பிரேமி குறிப்பிட்டுள்ளார்.
ரத்துபஸ்பல சம்பவம் தொடர்பில் வேறும் தரப்பினரும் விசாரணைகளை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதேச மக்களுக்கு குழாய் நீர் விநியோகம் செய்யவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
தேர்தல் நீதியாகவும் நியாயமானதாகவும் நடைபெற வேண்டும்: இந்தியா அழுத்தம்
[ வியாழக்கிழமை, 15 ஓகஸ்ட் 2013, 04:17.24 AM GMT ]
எதிர்வரும் செப்டம்பர் மாதம்ட நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தல் நீதியாகவும், நியாயமாகவும், நம்பகமான முறையிலும் நடைபெறும் என்று இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்ஹா, இன்று இந்தியாவின் 67வது சுதந்திர நாளை முன்னிட்டு இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசாங்கத்தின் அண்மைக்கால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக இந்தியா தனது கருத்தை தெரியப்படுத்தியுள்ளது.
மேலும், தேசிய ஒருமைப்பாட்டினை ஏற்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம், நிலையான அரசியல் தீர்வு ஒன்று காண்பதாக, இந்தியாவுக்கும், அனைத்துலக சமூகத்துக்கும் அளித்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சமத்துவம், நீதி, கௌரவம், சுயமரியாதையுடன் கூடிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்துவதன் மூலமே,இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட எல்லா குடிமக்களும் சம பங்காளராக வாழ முடியும் என்று தெரிவித்தார்.
போரின் முடிவு, எல்லா சமூகங்களும் இலங்கையில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வதற்கான இணையற்ற வாய்ப்பை வழங்கியுள்ளது இந்திய உயர்ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten