maandag 12 augustus 2013

அமெரிக்க தூதரகம் எதிர்க்கட்சித் தலைவரது அலுவலக பணிகளை செய்து வருகிறது!- விமல் வீரவன்ஸ!


கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்பொழுது எதிர்க்கட்சித் தலைவரின் பணிமனை மேற்கொள்ளும் காரியங்களை மேற்கொண்டு வருகிறது என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் உள்ள ஒருவருக்கு தடிமன் ஏற்பட்டாலும் அதனை கண்டித்து அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது.
தும்புத்தடிக்கு அருகில் ஈ பறந்தாலும் அதனையும் கண்டித்து அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிடுகிறது.
விரைவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் எமது விடயங்கள் பார்க்க வருகிறார்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை கவிழ்க்க முடியுமா என்று பல சக்திகள் பல்வேறு வகையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten