முல்லைத்தீவில் நவிப்பிள்ளை:(வீடியோ இணைப்பு ) !
நேற்றைய தினம் ஐ.நா மனித உரிமைக் கழகத்தின் ஆணையாளர் நவனீதம் பிள்ளை அவர்கள் முல்லைத்தீவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அவர் அங்கே தமிழ் பெண்களையும் சிறுவர்களையும் சந்தித்து உரையாடி அவர்களது குறைகளைக் கேட்டறிந்துகொண்டார். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் முல்லைத்தீவுக்குச் சென்றிருந்தார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. பலர் அவரைச் சந்தித்திருந்தபோதும், சில தமிழ் பெண்களும் விதவைகளும் எது நடந்தாலும் பரவாயில்லை என்ற துணிவுடன், இறுதிப் போரில் நடந்த சில நிகழ்வுகளை அவருக்கு விளக்கினார்கள். இருப்பினும் நவிப்பிள்ளையின் கவனத்தை திசைதிருப்ப, இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வேறு சில தமிழ் பெண்களை அங்கே திட்டமிட்ட வகையில் நிறுத்தி இருந்தார்கள்.
அவர்கள் தாம் வாக்களிப்பதில் கஷ்டமாக இருப்பதாகவும், தமக்கு குடி நீர் பிரச்சனை இருப்பதாகவும், கதையை வேறு திசைக்கு இழுத்துச் சென்றுள்ளார்கள். (வீடியோ இணைப்பு)
Geen opmerkingen:
Een reactie posten