ஏறாவூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவருக்கு விளக்கமறியல்- பாதுகாப்பு ஊழியரைத் தாக்கிய சந்தேகத்தில் மூவர் கைது
[ சனிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2013, 11:14.24 AM GMT ]
ஏறாவூரில் பிரதேசத்தில் தம்வசம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தம்வசம் கஞ்சாவை வைத்திருந்ததோடு அதனை விற்பனை செய்தார்கள் என்ற சந்தேகத்தில் நேற்றிரவு இந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் இதுவரை இருந்து வந்த அரசியல் தொடர்புகளை கைவிடுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இவர்களை இன்று சனிக்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்தபோது சந்தேக நபர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு சந்திவெளி பிரதேச வைத்தியசாலை பாதுகாப்பு ஊழியரைத் தாக்கிய சந்தேகத்தில் மூவர் கைது
மட்டக்களப்பு சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கினார்கள் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் மூவரைத் தாம் கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரை அங்கு வந்திருந்த மூவர் நேற்றிரவு தாக்கினர் என்று தமக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்டையில் தாம் மூன்று பேரைக் கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமைபுரியும் என்.எம். முரளீதரன் என்பவரே தாக்குதலுக்குள்ளான நிலையில் தற்சமயம் மாவடிவேம்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக சந்திவெளி வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏறாவூர் பொலிஸார் இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சரத் பொன்சேகாவுடனான அரசியல் தொடர்புகளை கைவிடுகிறேன்: ஐ.தே.க பா.உறுப்பினர் பாலித
[ சனிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2013, 11:51.15 AM GMT ]
தற்காலிகமாக பறிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவம் மீண்டும் அவருக்கு வழங்கப்பட்டதை அடுத்து அவர் இதனை கூறினார்.
சரத் பொன்சேகா தலைமையில் கடந்த வருடம் கொழும்பில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் ரங்கே பண்டார கட்சியின் கட்டளையை மீறி கலந்து கொண்டார். இதனையடுத்து அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இம்முறை நடைபெறும் வடமேல் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக தனி குழுவொன்றை தேர்தலில் களமிறக்க போவதாக ரங்கே பண்டார தெரிவித்திருந்தர்.
இந்த நிலையில், கட்சியின் அங்கத்துவம் மீண்டும் கிடைத்துள்ளதால் அதனையும் கைவிட்டுள்ளதாக அவர் கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten