வெலிவேரியாவில் குடிநீரில் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்பட்ட கையுறை தொழிற்சாலையின் கழிவுகள் தொடர்பிலான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி குறித்த குடிநீரில் இரசாயன துணிக்கைகள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் ஆங்கில செய்திதாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த பரிசோதனைக்காக இலங்கையின் புவிசரிதவியல் மற்றும் தடயவியல் நிறுவனம் இரண்டு இடங்களில் மண் மாதிரிகளை சேகரித்தது.
முதலாவது மாதிரி தொழிற்சாலைக்கு அருகிலும் இரண்டாவது மாதிரி தொழிற்சாலைக்கு தொலைவிலும் சேகரிக்கப்பட்டது.
பின்னர் இந்த மாதிரிகள் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதன்போது ஆரம்பக்கட்ட சோதனையின் போது மண்ணின் பிஎச் மட்டம் குறைந்துள்ளதை அவதானிக்க முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் மாதிரிகளின் சோதனை முடிவடைந்து அதன் இறுதியறிக்கை கொழும்பு குற்றப்புலனாய்வு துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என்று இலங்கை நீர்வள சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten