தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 6 augustus 2013

புறக்கோட்டை தனியார் பஸ் நிலையத்தின் நேரப்பதிவாளர் வெள்ளை வானில் கடத்தப்பட்டார்


முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மனைவியிடம் 30 லட்சம் மோசடி
[ செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 01:50.45 AM GMT ]
முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மனைவியிடம் 30 லட்ச ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் மனைவியின் வங்கிக் கணக்கில் இவ்வாறு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கல்கிஸ்ஸ நீதவான் எதிரில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸ டெம்பல்ஸ் வீதியைச் சேர்ந்த ஆனந்த கொஸ்தா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் லக்கீ கொடிதுவக்கவின் மனைவி லக்ஸ்மி கொடிதுவக்குவின் வங்கிக் கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
புறக்கோட்டை தனியார் பஸ் நிலையத்தின் நேரப்பதிவாளர் வெள்ளை வானில் கடத்தப்பட்டார்
[ செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 02:09.05 AM GMT ]
கொழும்பு புறக்கோட்டை குணசிங்கபுர தனியார் பஸ் நிலையத்தின் நேரப்பதிவாளர் (டைம்கீப்பர்) வெள்ளை வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
நடுப்பகலில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபரை கடுமையாக தாக்கி வெள்ளை வான் ஒன்றில் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏ.காமினி என்ற நேரப் பதிவாளரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
பஸ் நடத்துனர்களை அச்சுறுத்தி இந்த நபர் கப்பம் பெற்று வந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கப்பம் பெற்றுக் கொண்டமை தொடர்பில் எவரும் இதுவரையில் முறைப்பாடு செய்ததில்லை. புறக்கோட்டை பொலிஸார் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten