maandag 12 augustus 2013

போகம்பரை சிறைக்கு ஹெரோயினை எடுத்துச் சென்ற தாய், மகன், மருமகள் விளக்கமறியலில்...!


கண்டி போகம்பரை சிறைச்சாலைக்கு ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துச் சென்ற தாய், மகன், மருமகள் ஆகியோரை கண்டி மோசடி தடுப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இன்று முற்பகல் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கண்டி மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ராகம பிரதேசத்தை சேர்ந்த இவர்கள் கொழும்பில் இருந்து சொகுசு பஸ்ஸொன்றில் கண்டிக்கு சென்று அங்கிருந்து போகம்பர நோக்கி சென்று கொண்டிருந்த போது பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.
தாயிடம் 2.35 கிராம் ஹெரோயினும் மகனிடம் 35 மில்லி கிராம் ஹெரோயினும், மருமகளிடம் 28 மில்லி கிராம் ஹெரோயினும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் வெளியில் இருந்து போகம்பர சிறையின் பாதுகாப்பு சுவர்களுக்கு மேலாக சிறைச்சாலைக்குள் வீசி எறிந்து வந்துள்ளதாக சந்தேக நபர்கள் கூறியுள்ளனர்.
தொடர்ச்சியாக இவர்கள் இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

Geen opmerkingen:

Een reactie posten