donderdag 8 augustus 2013

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) விபத்தில் படுகாயம்!


வடமாகாண சபைத் தேர்தல்! சுவரொட்டிகள், பதாதைகள் விளம்பரத்திற்கு தடை!- தேர்தல் ஆணையாளர்
[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 12:19.43 AM GMT ]
வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் சுவரொட்டிகள், பதாதைகளை விளம்பரப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அ.அச்சுதன் தெரிவித்தார்.
வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் தேர்தல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்தல் சட்டத்தின் பிரகாரம் விளம்பர பலகைகள், பதாதைகளை காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தடையினை மீறி விளம்பர பலகைகள் மற்றும் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டால், குறித்த வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் கூறினார்.
சுவரொட்டிகள், பதாதைகளை காட்சிப்படுத்துவர்கள் தொடர்பாக தேர்தல் திணைக்களத்தினால், இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த அறிவுறுத்தலை மீறி செயற்படும் வேட்பாளர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் கைது செய்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனவே, வீதியோரங்களில் விளம்பர பலகைகள், பதாதைகள், சுவரொட்டிகள் போன்றவற்றினை விளம்பரப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அனைத்து கட்சிகளிடமும், வேட்பாளர்களிடம் யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) விபத்தில் படுகாயம்!
[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 12:10.12 AM GMT ]
கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.
மன்னாரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வரும் போது இடம்பெற்ற விபத்திலேயே இவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகமாக வரும்போது வானின் குறுக்காக நாய் பாய்ந்ததன் காரணமாக வானில் நாய் அடிபடாமல் தடுக்க முனைந்த போது வானில் பின்புறமாக இருந்த உறுப்பினர் முன்பக்கமாகவிருந்த இருக்கையில்
மோதுண்டு படுகாயமடைந்துள்ளார்.
இதன்போது மாகாணசபை உறுப்பினரின் வாய்ப் பகுதியில் கடும் காயம் ஏற்பட்டுள்ளதுடன் சத்திர சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.
தற்போது கொழும்பில் உள்ள தனியார் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக உறுப்பினரின் இணைப்பாளர் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten