வடக்கிற்கான அதிவேக பாதை நிர்மாண நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட சீன நிறுவனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
வடக்கு அதிவேக பாதை திட்ட நிர்மாணப் பணிகளை சைனா மேர்ச்சன்ட்ஸ் குறூப் நிறுவனம் மேற்கொண்டு வருவதுடன், இந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களை அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதன் போதே ஜனாதிபதியவர்கள் மேற்படி பணிப்புரையை விடுத்துள்ளார்.
சைனா மேர்ச்சன்ட்ஸ் குறூப் நிறுவனத்தின் தலைவர் லீஜியாங் கொன்க் தலைமையிலான குழுவின ருக்கு வட மாகாணத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் விளக்கினார்.
இதன்போது வடக்கு மற்றும் தெற்குக்கிடையில் போக்குவரத்தை இலகுபடுத்துவது மற்றும் துரிதப்படுத்துவது தொடர்பில் அதிவேக பாதையின் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அக்குழுவினருக்குத் தெளிவுபடுத்தினார்.
சைனா மேர்ச்சன்ட்ஸ நிறுவனம் தற்போது வடக்கு அதிவேக பாதை நிர்மாணிப்புக்கான முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டம் தொடர்பான ஆய்வுகளோடு தொழில்நுட்பம் மற்றும் நிதி அறிக்கைகளை தயாரித்துள்ளது.
ஜனாதிபதியவர்கள் வடக்கு அதிவேக பாதையை நிர்மாணிப்பதற்கு மேற்படி நிறுவனத்திடமுள்ள திறமை குறித்தும் நம்பிக்கை வெளியிட்டார்.
இலங்கையிலுள்ள சீனத் தூதுவர் வூஜியெங்கோ மற்றும் சைனா மேர்ச்சன்ட்ஸ் நிறுவன உயரதிகாரிகளுடன் ஜனாதிபதியுடனான இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten