zondag 4 augustus 2013

ரவூப் ஹக்கீமின் அமைச்சுப் பதவி பறி போகலாம்?

தேர்தல்களுக்காக மேலும் 20 மில்லியன் ரூபாய்கள் தேவை- நியாயமான முறையில் தேர்தலில் வெற்றியீட்ட வேண்டும்: ஜனாதிபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 12:53.01 AM GMT ]
எதிர்வரும் மூன்று மாகாணசபை தேர்தல்களுக்கு மேலும் 20 மில்லியன் ரூபாய்கள் தேவை என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கண்காணிப்பாளர்களை அழைப்பதற்காக இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாகாண சபைத் தேர்தல்களுக்கு செலவிடப்படும் 1500 மில்லியன்களுக்கு மேலதிகமாகவே இந்த 20 மில்லியன் ரூபாய்கள் கோரப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல்களுக்காக சர்வதேசத்தில் இருந்து 11 கண்காணிப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியாயமான முறையில் தேர்தலில் வெற்றியீட்ட வேண்டும்: ஜனாதிபதி
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் நியாயமான முறையில் வெற்றியீட்ட வேண்டுமென அமைச்சர்களின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.
எப்படியாவது தேர்தலில் வெற்றியீட்ட வேண்டும் எனக் கருதவில்லை.
போரின் பின்னர் நடைபெற்ற முதலாவது பாராளுமன்றத் தேர்தலின் போது கண்டியில் குழப்பம் விளைவிக்கப்பட்டது.
அமைச்சர் மஹிந்தானந்தவின் நடவடிக்கைகளினால் இவ்வாறு குழப்பம் ஏற்பட்டது. குறிப்பாக எம்மவரிடையே போராட்டங்கள் இடம்பெறுவதனை அனுமதிக்க முடியாது.
குருணாகல் மற்றும் மாத்தளை பிரதேசங்களில் சர்ச்சைகள் எழுந்துள்ளதாக கேள்விப்பட்டேன் என ஜனாதிபதித் தெரிவித்துள்ளார்.
ரவூப் ஹக்கீமின் அமைச்சுப் பதவி பறி போகலாம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 01:39.26 AM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் பதவி பறிபோகக் கூடுமென சிங்களப் பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் சிறுபான்மை கட்சித் தலைவர் ஒருவரின் அமைச்சுப் பதவி பறி போகலாம் என தெரிவித்துள்ளது.
ஆளும் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.
இதேவேளை, மாகாணசபைத் தேர்தல்களின் நிறைவில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாகாணசைபைத் தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக கட்சியின் சில உறுப்பினர்கள் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தலின் பின்னர் இவர்களுக்கு அமைச்சு அல்லது பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.
(இரண்டாம் இணைப்பு)
எதிர்வரும் மாகாண சபை தேர்தலுக்கு பின்னர், அரசாங்கம் அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ள உள்ளதாகவும் இதன் போது சிறுபான்மை அமைச்சர் ஒருவரின் பதவி பறிக்கப்படும் எனவும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, வடக்கு மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடும் சிறுபான்மை அமைச்சர் ஒருவரே அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட உள்ளார்.
இதனிடையே மாகாண சபை தேர்தல் நடைபெறும் சமயத்தில் ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள உள்ளனர்.
இவர்களுக்கு அமைச்சர் பதவி அல்லது பிரதியமைச்சு பதவி வழங்கப்படலாம் என தெரிவித்தார்.
அதேவேளை வடக்கு மாகாண சபை உள்ளிட்ட மூன்று மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கு, தேர்தலுக்கு பின்னர் மாற்றியமைக்கப்பட உள்ள அமைச்சரவையில் இடம் வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏனைய மாகாணங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதை பொருட்படுத்தாத அரசாங்கம், வடக்கு மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவு தொடர்பில் கடும் அதிருப்தி கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டால், வடக்கு மாகாணத்தை கைப்பற்றலாம் என்ற எதிர்ப்பார்ப்பு ஆளும் கட்சியிடம் காணப்பட்டதாகவும் முஸ்லிம் காங்கிரஸின் முடிவு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சாதகமான அமைந்து விடும் என அரசாங்கம் கருதுவதாகவும் அரசாங்கத்தின் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Geen opmerkingen:

Een reactie posten