தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 17 augustus 2013

மகனின் தேர்தல் பிரசாரத்திற்கு அரச வளங்களை பயன்படுத்தும் அமைச்சர்: ஜனாதிபதியிடம் முறைப்பாடு - காகித ஆலையின் தொழிற் சங்க நிர்வாகிகள் - நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா சந்திப்பு

யாழில் மோட்டார் பந்தய போட்டியொன்றை செப்டெம்பர் மாதத்தில் நடத்த ஏற்பாடு
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 06:36.32 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் மோட்டார் பந்தய போட்டியொன்றை, செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் நடத்தவுள்ளதாக அதன் ஏற்பாட்டுக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர்.
யாழ் மோட்டார் பந்தயக் கொண்டாட்டம் 2013 என்னும் தலைப்பில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியை இலங்கை மோட்டார் வாகன விளையாட்டுக்கள் சங்கம், இலங்கை மோட்டார் சைக்கிள் விளையாட்டுக்கள் சம்மேளனம் ஆகியவற்றின் அனுமதியுடன், மோட்டார் பந்தய அமைப்பு மற்றும் மோட்டார் பந்தய கழகம் ஆகியவற்றுடன் இணைந்து கோல்டன் மோட்டார் விளையாட்டுக் கழகம் நடாத்தவுள்ளது.
இலங்கைப் பிரஜைகள் மற்றும் இலங்கையில் வசிக்கும் உரிமையைக் கொண்டுள்ளவர்கள் யாவரும் இந்த மோட்டார் பந்தய போட்டி நிகழ்வில் பங்குபற்ற முடியும்.
இதற்குரிய விண்ணப்பங்கள் ஜூலை மாதம் 23ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் பந்தயப் போட்டியானது செப்பெரம்பர் 14ம் 15ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அத்துடன் யாழ்ப்பாண இளைஞர் யுவதிகளுக்கான போட்டியாக சைக்கிள் ஓட்டம், மரதன் ஓட்டம் ஆகியன நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மரதன் ஓட்டமானது ஆண்களுக்கான மரதன் ஓட்டம் 22 கிலோ மீற்றரும், பெண்களுக்கான மரதன் ஓட்டம் 15 கிலோ மீற்றரும் நடைபெறவுள்ளது.
ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டமானது 110 கிலோ மீற்றரும், பெண்களுக்கான சைக்கிள் ஓட்டமானது 35 கிலோ மீற்றர் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விபங்களை இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் மோட்டார் பந்தய அமைப்பு, மோட்டார் பந்தயக் கழகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன், கோல்டன் மோட்டார் விளையாட்டுக்கழக பிரதிநிதிகளும கலந்துகொண்டு விபரங்களை வெளியிட்டனர்.
மகனின் தேர்தல் பிரசாரத்திற்கு அரச வளங்களை பயன்படுத்தும் அமைச்சர்: ஜனாதிபதியிடம் முறைப்பாடு - காகித ஆலையின் தொழிற் சங்க நிர்வாகிகள் - நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா சந்திப்பு
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 06:29.40 AM GMT ]
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, வடமேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தனது மகனின் தேர்தல் பிரசாரத்திற்காக அரச வளங்களையும் அதிகாரிகளையும் பெருமளவில் பயன்படுத்தி வருவதாக ஆளும் கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது தொடர்பான விபரங்களை முன்வைத்து குருணாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.
அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்த பின்னர் இந்த கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.  அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமைச்சர் ஜோன்ஸ்டனின் நடவடிக்கைகள் காரணமாக சுதந்திரம் மற்றும் நீதியான தேர்தலை நடத்த முடியாது போகும்.
இதனால் ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களுக்கு அநீதி ஏற்படுவதோடு, அரசாங்கத்தின் நற்பெருக்கும் களங்கம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் இலக்கங்கள், அரச வளங்களை பயன்படுத்துவது தொடர்பான புகைப்படங்கள் இந்த கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இது குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோருக்கு ஆலோசனை வழங்குவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் எவர் நடந்து கொண்டாலும் தகுதிகளை கவனத்தில் கொள்ளாது அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
காகித ஆலையின் தொழிற் சங்க நிர்வாகிகள் - நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா சந்திப்பு
வாழைச்சேனை காகித ஆலையின் தொழிற் சங்க நிர்வாகிகள் நேற்று வெள்ளிக்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசாவை சந்தித்துள்ளனர்.
இதன்போது தங்களுக்கு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் சம்பள கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலை அடிக்கடி இடம்பெறுவதாகவும் சம்பள பணம் பெறுவதற்கு மக்கள் பிரதிநிதிகளிடம் முறையிட்ட பின்னரே நிலுவை பணம் வழங்கப்படுவதாகவும் இந்த சந்திப்பின் போது குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மேற்படி ஆலையில் தற்போது 140 நிரந்தர ஊழியர்களும் 150 அமைய அடிப்படையிலான ஊழியர்களும் தொழில் புரிந்து வருகின்றனர். இவர்களுக்கான சம்பளத் தொகையை சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி பெற்றுத்தருமாறும் இதன்போது நாடாளுமண்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனை கேட்டறிந்த கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரச வழங்கல் அபிவிருத்தி அமைச்சின் செயலாளருடன் மேற்படி விடயம் தொடர்பாக தொடர்புகொண்டார்.
இதனையடுத்து காகித ஆலையின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவுடன் தொடர்புகொண்டு தற்போது ஆலையானது சுயமாக இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊழியர்களுக்குரிய நிலுவை சம்பளம ஒரு வார காலத்திற்குள் வழங்குவதற்க்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten