woensdag 7 augustus 2013

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக வகுப்பு தடை விதிக்கப்பட்டிருந்த இரண்டு மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தனியார் விடுதிகளில் தங்கியிருந்த இந்த மாணவர்கள் மீது இன்று காலை இனந்தெரியாதவர்கள் சென்று தாக்குதல் நடத்தியுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதி தரிந்து அமரசிங்க தெரிவித்தார்.
தற்காலிமாக வகுப்பு தடைவிதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் தங்கியுள்ள தனியார் விடுதிகளின் உரிமையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த அச்சுறுத்தல்கள் மற்றும் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் அமரசிங்க மேலும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten