நவநீதம்பிள்ளையுடன் மன்னார் ஆயர் சந்திப்பு !
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை நேற்று மாலை சந்தித்து முக்கிய பேச்சு வாதர்த்தை நடத்தியுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. இச் சந்திப்பு கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா அலுவலத்தில் இடம்பெற்றது. ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசியதாக மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு மேலும் தெரிவித்தார்.
இதன்பொழுது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான தேசிய ஆணைக்குழுவில் வழங்கப்பட்ட சாட்சிகள் தொடர்பில் தான் எடுத்துரைத்ததாகவும்ட அவர் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கித் தருமாறு அவரிடம் கேட்டுக் கொண்டோம் என்றும் ஆயர் மேலும் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten