வெலிவேரியா பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பொறுப்பான படைகளின் கட்டளை அதிகாரிகள் கைது செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு உண்மையான குற்றவாளியை நாட்டுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
படைத்துறை தலைவராக இலங்கையின் ஜனாதிபதி இருப்பாரானால் அவர் உண்மைக்குற்றவாளியை கண்டறியும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இந்த சம்பவத்தின் போது பிடிகேடியர் தேசப்பிரிய என்பவரே கட்டளைகளை பிறப்பித்தார் என்று கூறப்படுகிறது.
எனவே பொதுமக்களின் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியர்கள் இராணுவ நீதிமன்றத்தின் முன்னால் ஆஜர்செய்யப்பட்டு தண்டனை பெற்றுதரப்பட வேண்டும்.
இதன்போது எதிர்காலத்தில் இராணுவத்தினரின் வன்முறைகளை தடுக்க முடியும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
வெலிவேரியாவுக்கு பின்னர் நாட்டில் ஜனநாயக வீழ்ச்சி ஏற்படும்
வெலிவேரியா சம்பவம் தொடர்பில் அரசாங்கம் உண்மையான விசாரணைகளை முன்னெடுக்கவேணடும்
இல்லையேல் இலங்கையின் ஜனநாயகம் எதிர்காலத்தில் வீழ்ச்சிக்கண்டு கேள்விக்குள்ளாகும் என்று மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இறுதிப்போருக்கு பின்னர் பொதுமக்கள் மீது அரசாங்கப்படைகள் தாக்குதல் நடத்தியிருப்பது முதல் தடவையல்ல.
முன்னதாக கட்டுநாயக்க மற்றும் சிலாபம் பகுதிகளில இவ்வாறு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த சம்பவங்களின் போது உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.
இந்தநிலையில் வெலிவேரியா சம்பவத்துக்கு யார் பொறுப்பேற்கப் போகின்றார்கள் என்று மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் யார் பதிலளிப்பர் என்று அந்த நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten