dinsdag 6 augustus 2013

வடக்குத் தேர்தலில் எவ்வாறான முடிவு வந்தாலும் எம்மை பாதிக்காது!- பஷில் ராஜபக்ச


போலி இரண்டாயிரம் ரூபா தாள்களுடன் கொழும்பில் ஒருவர் கைது
[ திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 03:27.34 PM GMT ]
93 போலி இரண்டாயிரம் ரூபா தாள்களுடன் கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் குருவிட்ட பிரதேசத்தை சேர்ந்தவர் என புறக்கோட்டை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புறக்கோட்டை – பஸ்டியன் மாவத்தையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் உணவிற்காக இவர் இரண்டாயிரம் ரூபாவினை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, போலி தாள் தொடர்பாக காவற்துறையினருக்கு தெரிவித்ததையடுத்து, இந்த போலி தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வடக்குத் தேர்தலில் எவ்வாறான முடிவு வந்தாலும் எம்மை பாதிக்காது!- பஷில் ராஜபக்ச
[ திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 03:58.26 PM GMT ]
அரசாங்கத்தைப் பொறுத்தவரை வடக்குத் தேர்தலில் எவ்வாறான முடிவு வந்தாலும் அது எம்மை பாதிக்காது. எந்தவொரு முடிவும் அரசாங்கத்தில் தாக்கம் செலுத்தவும் போவதில்லை. வடக்கு என்பது அரசாங்கத்துக்கு ஒரு மாகாண சபை மட்டுமேயாகும். என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ச தெரிவித்தார்.
வடக்குத் தேர்தல் விடயத்தில் ஏதாவது அநீதிகள், அநியாயங்கள் நடைபெற்றால் அது தொடர்பில் கூட்டமைப்பினர் முதலில் ஜனாதிபதியிடம் கூறலாம்.
பொதுநலவாய அமைப்பிடம் கூறுவதற்கு முன்னர் இந்த விடயங்கள் குறித்து முதலில் ஜனாதிபதியிடம் தெரிவித்து அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வடக்கில் ஆளும் கட்சியின் வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களித்தால் அடுத்ததாக முதலமைச்சரை தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும்.
ஆனால் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்தால் அந்த சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைக்காது போகும் என்றும் அமைச்சர் பஷில் ராஜபக்ச கூறினார்.
வடக்குத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை பாதுகாப்புத் தரப்பினர் விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துவதாக கூட்டமைப்பினர் பொதுநலவாய அமைப்பின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளமை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Geen opmerkingen:

Een reactie posten