[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 02:55.41 AM GMT ]
இவர்கள் சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்த நிலையிலேயே கைதுசெய்யப்பட்டனர். இவர்களின் மூன்று பெண்களும் 10 சிறுவர்களும் அடங்கியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே அவர்கள் தங்கியிருந்த இடம் சோதனைக்குள்ளாக்கப்பட்டது.
இந்தநிலையில் இவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
இலங்கை கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்குமாறு வலியுறுத்தி சட்ட மாணவர்கள் உண்ணாவிரதம்
[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 12:39.10 AM GMT ]
கல்லூரி வளாகத்துக்குள் வெள்ளிக்கிழமை முதல் இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மாணவர்கள் தொடங்கியுள்ளனர்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் கூட்டம் வேறு நாட்டுக்கு மாற்றப்பட வேண்டும். அவ்வாறு இலங்கையில் நடைபெற்றால் கூட்டத்தில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணிக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு அமுல்படுத்த வேண்டும்.
சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் தமிழக அரசின் இலவச லப்டாப் வழங்கப்பட வேண்டும்.
என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten