[ சனிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2013, 04:30.31 AM GMT ]
வடக்கு உட்பட மூன்று மாகாணசபைகளுக்குமான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதனை வைத்து கட்சியை பிளவுபடுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய வெலிவேரிய, ரத்துபஸ்வல பொதுமக்கள் தாக்கப்பட்டமைக்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச மன்னிப்புக் கோரியுள்ளார்.
இவ்வாறான குள்ளநரிகளின் தந்திரத்திற்கு அஞ்சுகின்ற ஒரு கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்காது எமது கட்சியின் ஒற்றுமையை விலைபேசி மாற்றுத்தரப்பிற்கு அங்கத்தவர்களை தாரைவார்த்துக் கொடுக்கின்ற சில சகுனி வேலைகள் கட்சிக்குள்ளேயே இடம்பெறுகின்றன என்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
வடக்கைப் பொறுத்தமட்டில் இந்தத்தேதலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அதிக பெரும்பான்மையை பெறும்.
அந்த அடிப்படையில் நாம் தனித்து போடியிடுவதால் பெரிய அரசியல் சாகசங்களைச் செய்யப்போவதில்லை.
எமது முடிவினால் பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படாது.
ஆனாலும், முஸ்லிம் காங்கிரஸை அரச தரப்பில் இணைத்துக் கொண்டு எங்கள் முதுகில் சவாரி செய்து தங்களுடைய உறுப்பினர்களை அதிகரிக்க அரச தரப்பு முஸ்லிம் அமைச்சர் ஒருவர் முயற்சித்தார்.
அதற்கு உடந்தையாக அரச தரப்பில் அபிவிருத்தி அமைச்சர் ஒருவரும் ஒத்தாசை வழங்கினார்.
இவை அனைத்தும் எங்களை பலவீனப்படுத்துவதற்கான முயற்சியின் அங்கமாகத்தான் அரங்கேறுகின்றன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெலிவேரிய தாக்குதல்: மன்னிப்புக் கோரினார் பசில் ராஜபக்ச
[ சனிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2013, 02:39.01 AM GMT ]
இந்தச் சம்பவத்தில் உயிர்களையும், உடமைகளை இழந்தவர்களுக்கும் அவர் முழு மனதுடன் அவர் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் தமது கடமையைச் செய்ய முயன்ற பல ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட அசௌகரியங்கள் துரதிஸ்டவசமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படையினரின் இந்த நடவடிக்கை பொதுமக்களால் மன்னிக்கப்பட முடியாதது என்றும் அவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும், எந்த வகையினும் இத்தகைய நடவடிக்கையைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட தொழிற்சாலை உடன்பாட்டை மீறியிருந்தால் மக்களின் விருப்பத்துக்கமைய, அதை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதுவரை, வெலிவேரிய தாக்குதலை அரசாங்கம் தற்காப்புக்கான தாக்குதல் என்றும், அடையாளம் தெரியாத குழுவொன்றின் சதி என்றும் கூறிவந்தது.
முதல் முறையாக பசில் ராஜபக்ச இதற்காக பொதுமன்னிப்புக் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten