zondag 4 augustus 2013

தமிழக மீனவர்கள் ஜெயலலிதாவிடம் பேச வேண்டும்!-அமைச்சர் நாராயணசாமி

முன்னாள் இராணுவத் தளபதிகள் வரிசையில் இருந்து சரத் பொன்சேகா நீக்கப்பட்டுள்ளார்!
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 02:37.50 AM GMT ]
இலங்கையின்  இராணுவத் தளபதிகள் வரிசையில் இருந்து சரத் பொன்சேகா நீக்கப்பட்டுள்ளார். அதனடிப்படையில் இராணுவத் தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள இராணுவத் தளபதிகளின் நிழல்பட வரிசையில் இருந்து சரத் பொன்சேகாவின் படம் நீக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இலங்கையின் 20வது இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற லெப். ஜெனரல் தயா ரத்னாயக்க, பதவியை விட்டு விலகிச் சென்ற இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவின் ஒளிப்படத்தை திறந்து வைத்தார்.
ஆனால், அதற்கு முன்னால் இருக்க வேண்டிய, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் படம் அங்கு இருக்கவில்லை.
சரத் பொன்சேகாவின் படம் இருந்த இடத்திலேயே ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவின் படம் வைக்கப்பட்டிருந்தது.
அதேவேளை, 2009 ஜுலையில் இலங்கை இராணுவத் தளபதியாக பதவியேற்ற போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் படத்தை திறந்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழக மீனவர்கள் ஜெயலலிதாவிடம் பேச வேண்டும்!-அமைச்சர் நாராயணசாமி
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 04:11.19 PM GMT ]
இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்களை விடுவிக்க இந்திய மத்திய அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் செயற்பட்டு வருகிறது.
எனினும் தமிழக மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் இலங்கை கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படவேண்டும் என்று கோருவதாக மத்திய அமைச்சர் வி நாராயணசாமி குற்றம் சுமத்தினார்.
அண்மையில் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 29 மீனவர்களின் குடும்பங்களுடன் கலந்துரையாடிய அவர் இலங்கை கடலில் மீன்பிடிக்க உரிமை வேண்டுமாயின் அதற்கு இலங்கை மீனவர்களுடன் பேச்சு நடத்த வேண்டும்.
எனவே இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தமிழக முதலமைச்சரை வலியுறுத்துமாறு நாராயணசாமி  மீனவர்களின் உறவினர்களிடம் கேட்டுக்கொண்டார்.

Geen opmerkingen:

Een reactie posten