zaterdag 17 augustus 2013

இந்தியாவுடனான பிரச்சினைகளின் போது இலங்கை பக்கம் சார முடியாது: சீனா- ரஷ்யா அறிவிப்பு?

இலங்கை மற்றும் இந்தியா இடையிலான முரண்பாடுகளின் போது தாம் இலங்கையின் பக்கம் சார்ந்திருக்க போவதில்லை என சீனாவும் ரஷ்யாவும் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
கச்சதீவு மற்றும் 13வது அரசியல் திருத்தச் சட்டம் சம்பந்தமாக இலங்கை செயற்பட்ட விதம் தொடர்பில் நூறு சத வீதம் இணங்க முடியாது என்றும் அந்த நாடுகள் கூறியுள்ளன.
அதேபோல் இலங்கைக்கும், இந்தியாவுக்கு இடையில் ஏற்படும் எந்த பிரச்சினையிலும் தாம் இலங்கைக்கு ஆதரவாக இருக்க முடியாது என்றும் இந்த நாடுகள் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இது தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளதுடன் இந்த செய்தியை அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தியிருப்பதாக ராஜதந்திர வட்டர தகவல்கள் தெரிவித்தன.

Geen opmerkingen:

Een reactie posten