vrijdag 9 augustus 2013

இலங்கை தமிழர் பிரச்சினை: தி.மு.க. போராட்டத்துக்கு நாராயணசாமி கண்டனம்


மட்டு. கல்லடியில் வாகன விபத்து - நால்வர் படுகாயம்
[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 07:43.11 AM GMT ]
மட்டக்களப்பு கல்லடி மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் முச்சக்கர வண்டி ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த சந்தியால் வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவதற்காக முச்சக்கர வண்டியின் சாரதி முயற்சித்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து,  குடைசாய்ந்தது.
அதில் பயணித்த சாரதி உட்பட நான்கு பேரும் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழர் பிரச்சினை: தி.மு.க. போராட்டத்துக்கு நாராயணசாமி கண்டனம்
[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 08:10.00 AM GMT ]
தி.மு.க. உள்பட சில கட்சிகள் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்துகின்றனர். அவர்களால் இலங்கை தமிழர்களையோ, தமிழக மீனவர்களையோ ஒரு போதும் காப்பாற்ற முடியாது. என  மத்திய அமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் நாராயணசாமி இன்று விமானம் மூலம் சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
இந்திய இராணுவ வீரர்களை பாகிஸ்தான் சுட்டுக் கொன்ற விவகாரம் தொடர்பாக 2–வது அறிக்கையில் முழுமையாக கூறப்பட்டு உள்ளது. அது தெரியாமல் சிலர் இப்பிரச்சினையை அரசியல் ஆக்குகிறார்கள்.
இலங்கை தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் சிறை பிடிப்பு போன்ற சம்பவங்களில் ஒரு போதும் மத்திய அரசு அலட்சியமாக நடந்து கொள்ளவில்லை.
ஆனால் தி.மு.க. உள்பட சில கட்சிகள் மத்திய அரசை கண்டித்து போராட்டம், மறியல் நடத்துகின்றனர்.
அவர்களால் இலங்கை தமிழர்களையோ, தமிழக மீனவர்களையோ ஒரு போதும் காப்பாற்ற முடியாது.
அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இலங்கை தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten