யாழ்.கொட்டடிப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ படை முகாமிற்குள்ளாக பாரிய பௌத்த கோயிலுடன் கூடிய புத்தர் சிலை ஒன்று அமைக்கப்படுவதாக பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்.நகரத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாரிய படைமுகாம்களை அமைத்திருந்த இராணுவத்தினர் அவற்றை தற்போது விடுவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீலங்கா ரெலிக்கொம்மிற்கு பின்னால் உள்ள காணியில் இராணுவத்திற்கான புதிய படைமுகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த படைமுகாமில் மறைப்பு செய்யப்பட்ட நிலையில் வீதிக் கரையோரமாக கட்டிட வேலைகள் நடைபெற்று வந்தன. குறிப்பாக பாரிய புத்தர் சிலையுடன் இந்த விகாரை அமைக்கப்பட்டு வருகின்றதோடு, கட்டிடப் பணிகள் முடிவடையும் நிலையினையும் எட்டியுள்ளன.
இது தொடர்பாக பிரதேச மக்கள் இராணுவத்திடம் வினவியபோது, படை முகாமில் உள்ள இராணுவத்தினரது வழிபாட்டிற்காக இந்த பௌத்த விகாரை அமைக்கப்படுகின்றதாக இராணுவத்தினர் தமக்கு பதிலளித்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வீதியின் கரையோரமாக இராணுவ முகாமிற்குள்ளாக அமைக்கப்படும் இந்த பௌத்த விகாரை மேலும் விஸ்தரிக்கப்படலாம் என்று அப்பகுதியில் உள்ள மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இராணுவத்தினர் முகாம்களை அமைத்து வைத்திருந்த பகுதிகளில் எல்லாம் பௌத்த விகாரைகளும் புத்த சிலைகளும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு புதிதாக பௌத்த விகாரைகளை அமைப்பது திட்டமிட்ட ஒரு நடவடிக்கை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten