தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 21 augustus 2013

சிங்களத்தின் மனிதப் படுகொலைகளுக்கு யார் சாட்சி? (ஆசிரியர் பார்வை)

208efghjkm
தாயகத்தின் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின் பொழுது 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் பலர்
இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் காணாமற்போனதாகவும் 208ehuhசுமத்தப்படும் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு  இயலுமாயின் ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையிடமும் ஏனைய சர்வதேச நாடுகளிடமும் இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.
 
தமிழ் இன அழிப்பிற்கு சிங்களத்திற்கு ஆதரவுதெரிவித்து ஆயுதங்களைவழங்கி உதவிக்கரம் நீட்டிய அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கு தர்மசங்கடத்தினை ஏற்படத்தியுள்ள, சர்வதேச அளவில் மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய ஒரு அறிவித்தலாக இதனை நோக்கமுடியும்.
 
208esazxஇறுதி யுத்தத்தின்போது போர்வலயத்திற்குள் அகப்பட்ட அப்பாவித் தமிழர்கள் மீது சர்வதேசத்தின் ஆதரவுடன் சிங்கள இராணுவம் கொத்துக்குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள், றொக்கற் குண்டுகள், இரசாயன ஆயுதங்கள் போன்றவற்றினைப் பயன்படுத்தி தாக்கியதும், இத்தாக்குதலினால் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் துல்லியமாக சர்வதேச அளவில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
208eszxcஇதற்கு சனல் - 4, அல் ஜஷீரா போன்ற சர்வதேச ஊடகங்களுக்கும் சமூக இணையவலைத் தளங்களுக்கும் ஒவ்வொரு தமிழர்களும் நன்றிக்கடன்பட்டுள்ளோம்.
 
இந்நிலையில், தாம் நடத்திய மனித குலத்திற்கு எதிரான தாக்குதல்களுக்கும் ஈனத்தனமான இனப்படுகொலைக்கும் ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஐக்கிய நாடுகள் சபையிடம் சவால் விடுத்துள்ளார்.
 
இத்தனைக்கும் மத்தியில் இலங்கை ஐ. நாவின் உறுப்பு நாடாகக் காணப்படுகின்றமை சுட்டக்கூடிய ஒன்றாகவுள்ளது.
 
போருக்குப் பின்னர் வடக்கில் சிங்கள அரசாங்கம் மேற்கொண்ட கணிப்பீட்டிற்கு அமைவாக,  இன அழப்புப்போரின் இறுதிக்கட்டத்தில்208edfgthசுமார் 7400 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2600 பேர் காணாமற்போயுள்ளனர்.கொல்லப்பட்ட 7400 தமிழர்களில் ஈழ விடுதலைக்காக  சண்டையிட்டு மரணமானவர்களும் உள்ளடங்கியுள்ளனர்.காணாமற்போன 2600 பேரில் 1600 பேர் தமிழீழ விடுதலைப் புலிகள். மீதமான 438 பேர் மட்டுமே இராணுவக்கட்டுப்பாட்டில் காணாமற்போயுள்ளனர். இவற்றில் 28 காணாமற்போன சம்பவங்கள் குறித்தே சிங்களப் படையினர் மீது நேரடியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என அறிக்கையிடப்பட்டுள்ளது.
 
208erdfமுல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்ற இறுதியுத்தத்தில் மட்டும் ஒரு இலட்சத்திற்கு அதிகமான தமிழர்கள் இறந்துள்ளனர். இதனை மாவட்ட ரீதியிலான சனத்தொகைக் கணிப்பீட்டின் ஊடாக அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
 
வடக்கிலுள்ள மன்னார், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் போருக்குப் பின்னர் சுமார் 1,50 000 தமிழ் மக்கள் பதிவுகளிலிருந்து காணாமல்போயுள்ளமை அரசாங்க அதிகாரிகளினாலும் மதகுருக்களினாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
208erdddfdஇதேபோல் போருக்குப்பின்னர் பலரைக்காணவில்லை என தமிழ் மக்களும் இனங்காட்டியுள்ளனர். தமிழ்மக்கள் காணாமல்போனவர்களைத் தற்பொழுதும் தேடிவருகின்றனர்.
 
இந்நிலையில் சிங்கள அரசாங்கம் வடக்கில் இறுதியாக 1983 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணிப்பீட்டின் அடிப்படையிலான புள்ளிவிபரத்தினைக் காட்டி தமிழர்களின் தொகையைக் குறைத்துப் பதிவுசெய்து சர்வதேசத்தினை ஏமாற்றியுள்ளது.
 
208erdrfஇறுதியுத்தத்தில் தமிழ் மக்களை சிங்களம் வகைதொகையின்றிக் கொன்றுகுவித்த பொழுது சர்வதேச நாடுகள் மௌனமாக இருந்ததன் விளைவாக தற்பொழுது சிங்களத்தின் மனிதப் படுகொலைக்குச் சாட்சிளைத் தேடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 
208esddsசர்வதேச வல்லரசுகள், இந்த மனிதப் படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்துமனித குலத்திற்குப் பேராபத்தினை விளைவிக்கக் கூடிய ஆயுதங்களை சிங்களத்திற்கு தாரைவாத்துள்ளதன் விளைவாக இன்று எந்தவெரு முகாந்திரமும் இல்லாத இலங்கையின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன.
 
இதனால் உலகின் பழம்பெரும் இனங்களில் ஒன்றான தாயகத் தமிழர்கள் 208ertrsa - Copyநீதிக்காகவும் உரிமைகளுக்காகவும் கண்ணீர்வடிக்கின்ற அவலம் தொடர்கின்றது.
 
தாயகத்தில் சிங்களத்தினால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் மனித எச்சங்களை அழிப்பதற்காக சீனா அமில இரசாயத்தினை வழங்கி தடயங்களை அழித்தாலும் சிங்களத்தின் தமிழ் இனப்படுகொலை இன்று சர்வதேச அளவில் மிகத்துல்லியமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால், கறைபடிந்த கரங்களுடன் நீதியை வழங்க முடியாதவர்களாக சர்வதேச நாடுகளும் ஐ. நா என்ற ஊலகப் பாதுகாப்பு அமைப்பும் தமிழர்களின் விடயத்தில் மௌனிக்கின்றன.
 
208ertyyஇறுதியுத்தத்தின் பொழுது தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கும் காணாமல் போனதற்கும் நேரடிச் சாட்சியாக போர்வலயத்திற்குள் அகப்பட்டு மரணவேதனைகளை அனுபவித்து மரணங்களை நேரில் பார்த்து மீண்டுவந்துள்ள எமது மக்கள் சாட்சியமளிக்கத் தயாராகவேயுள்ளனர்.
 
சாட்சிகளாக காணப்படுகின்ற இந்த மக்களின் ஆயுட்காலத்திற்குள் சிங்களத்தின் மீதான போர்க்குற்றச் சாட்டுக்களை சர்வதேச ரீதியாக208efgnjuவிசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்க சர்வதேசம் முன்வரவேண்டும்.
 
சர்வதேச அளவில் போர்க் குற்றவாளிகளைத் தண்டிப்பதன் ஊடாக தாயகத்தில் இதுபோன்ற மனிதப் பேரவலம் மீண்டும் ஏற்படாத வகையில் தடுத்து தமிழர்களும் அவர்களுடையபூர்வீகநிலங்களில் நிம்மதிகாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்த முடியும்என்பதை சர்வதேசம் உணரும்வரை சிங்களம் தாயகத் தமிழர்களைக் கொன்றுகொண்டே இருக்கும்.
 
சிங்களத்தின் மீதான போர்க்குற்ற விசாரணைகளை தமிழர்களின் விடயத்தில் மேற்கொள்வதற்கு சர்வதேசம் தயாரில்லை என்பது208erdsபுலனாகியுள்ள நிலையில் எமதுஇனத்தினையும் எம்மையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட்டு மீண்டும் போராடவேண்டிய கடமையை சகல தமிழ் மக்களுக்கும் காலம் வழங்கியுள்ளது.
 
இதற்குத் தமிழீழ தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனமான சிந்தனைகளும் வழிகாட்டுதல்களும் சிறந்த வழியாகும் என்பதை உணர்ந்துகொண்டு நாம் அனைவரும் உடனடியாகவே ஒன்றிணைய முன்வரவேண்டும்.
 
இராவணன்.
208erdx208eee

Geen opmerkingen:

Een reactie posten