zondag 4 augustus 2013

பொதுமக்களை சுட்டுக்கொன்று விட்டு சிரிக்கும் இலங்கை இராணுவம் !

தங்கச் சங்கிலி அபகரிக்க முயன்ற இராணுவ சிப்பாய் கைது !
03 August, 2013 by admin
தனது கணவனுடன் சென்று கொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை அபகரிக்க முயன்ற இராணுவ சிப்பாய் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொரலஸ்கமுவ பிரதேசத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ள அதேவேளை மொனராகலை பகுதியைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.மோட்டார் வண்டியில் சென்றவர்களிடமிருந்த குறித்த இராணுவ சிப்பாய் கொள்ளையிட முயற்சித்துள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிளுடன் இராணுவ சிப்பாய் மோதுண்ட நிலையில் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறியுள்ளார்.இந்நிலையில் வாகனத்தை செலுத்த முடியாது என முச்சக்கர வண்டி சாரதி தெரிவித்துள்ளார். முச்சக்கர வண்டி சாரதியை இராணுவ சிப்பாய் கூரிய ஆயுதத்தினால் குத்தியுள்ளார். இதன் பின்னதாக வீதியில் கூடிய மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து இராணுவ சிப்பாயை பிடித்துள்ளனர்.
பொதுமக்களை சுட்டுக்கொன்று விட்டு சிரிக்கும் இலங்கை இராணுவம் !
03 August, 2013 by admin


கம்பஹா, வெலிவேரிய பிரதேசத்திற்கு கடந்த 2 தினங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் பொதுமக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியமை யாவரும் அறிந்ததே. இதில் 17 வயது பள்ளி மாணவர் கொல்லப்பட்டார். குறிப்பிட்ட மாணவன் குண்டடிபட்டு நிலத்தில் விழ்ந்திருந்தவேளை, யாராவது உதவிக்கு வருமாறு அவ்விடத்தில் நின்றவர் ஒருவர் மன்றாடியுள்ளார். ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள், இராணுவம் சுட்டதால் பதறி அடித்துக்கொண்டு , சிதறி ஓடியுள்ளார்கள். இதேவேளை வெலிவேரிய பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நின்றிருந்த சில இராணுவத்தினர் குண்டடிபட்ட மாணவனைப் பார்த்து சிரித்துக்கொண்டு இருந்ததாக கூறப்படுவதோடு, அதற்கான ஆதாரப் புகைப்படம் ஒன்று சிங்கள இணையத்தில் வெளியாகியுள்ளது. இராணுவத்தினர் விரைந்து செயல்பட்டிருந்தால் அப்பள்ளி மாணவனைக் காப்பாற்றியிருக்க முடியும் எனவும் பொதுமக்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். 

தமது பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் ஒருவகை நச்சுத்திரவம் கலப்பதாகவும், அதனால் சுத்தமான தண்ணீர் வேண்டும் என்று கூறியே அன்றைய தினம் 4,000 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் அமைதி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் அனைவரும் சிங்களவர்களே. எமக்கே இக் கதி இன்றால் வட கிழக்கில் வாழும் தமிழர்களை இலங்கை இராணுவம் என்ன செய்திருக்கும் என்று, இந்த 4000 பேரில் ஒரு 40 பேராவது நினைத்திருப்பார்கள் அல்லவா ? அதுதான் மகிந்த ராஜபக்ஷவுக்கும், பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராகபக்ஷவுக்கும் கிடைத்திருக்கும் முதல் அடியாக நாம் பார்க்கலாம்.


Geen opmerkingen:

Een reactie posten