தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 10 augustus 2013

வெலிவேரிய சம்பவம் தொடர்பில் ஊடகக் கட்டுப்பாடு!- சிபிஜே குற்றச்சாட்டு!

வெலிவேரியவில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான ஊடக அறிக்கைகளை கட்டுப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்காவை தளமாகக்கொண்ட சிபிஜெ என்ற ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
வெலிவேரிய ரத்துபஸ்வலவில் பொதுமக்கள் குடிநீர் தொடர்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஆகஸ்ட் முதலாம் திகதி அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கையில் இயங்கும் சுதந்திர ஊடக இயக்கத்தின் மின்னஞ்சல் அறிக்கையின்படி இந்த தாக்குதல் உடனடியாக நிகழ்ந்த ஒன்றல்ல.
இது முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையிலேயே ஆர்ப்பாட்டம் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை சேகரித்த செய்தியாளர்களின் புகைப்படக் கருவிகள் மற்றும் தொலைக்காட்சி கமராக்கள் பறிக்கப்பட்டதாக சிபிஜே சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இந்தச் சம்பவத்தை அரசாங்க சார்பு ஊடகங்கள் சிறியளவான செய்தியாகவே பொதுமக்களுக்கு எடு;த்துச் சென்றமையையும் சிபிஜே சுட்டிக்காட்டியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten