[ திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 09:54.25 AM GMT ]
கடந்த 27 ம் திகதி நெடுந்தீவு பொலிசாரினால் மீட்கப்பட்டு யாழ்.போதானா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட 47 தொடக்கம் ஐம்பது வயது மதிக்க தக்க ஆணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
அத்துடன் ஊர்காவல்துறை பொலிசாரினால் யாழ.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட ஒரு பெண்ணினதும் ஒரு சிறுமியினதும் உடல்களும் இதுவரை இனம் காணப்படாத அதேவேளை, அவ் இரண்டு சடலங்களும் அவுஸ்திரேலியா சென்ற போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுடையதாக இருக்குமா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட ஏனைய மூன்று சடலங்களுள், ஒரு சடலம் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவருடையது என தெரிவித்த யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், மற்றைய இரண்டும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களுடையது என தெரிவித்தார்.
மீன்பிடி தொழிலுக்காக மன்னார் பேசாலையைச் சேர்ந்த மில்ரோய் ஜோசப் டியுரன் அப்புகாமி மற்றும் கமால்தீன் சமான் ஆகிய இருவரும் கடந்த 25 ம் திகதி மன்னார் கடற்பரப்பில் மின் பிடிக்க சென்றதாகவும் பின்னர் 26 ம் திகதி காலை ஊர்காவற்துறை கடற்பரப்பில் இருவரது சடலங்களையும் பொலிசார் மீட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.
வெலிவேரிய பிரதேசத்தை நந்திக்கடலாக மாற்றியது அரசாங்கம்: - இறந்த அகிலவின் இறுதி கிரியையில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு
[ திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 10:48.53 AM GMT ]
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
குடிநீர் பிரச்சினையை தீர்வு துப்பாக்கி வேட்டுகளை பயன்படுத்தியதால், சிலர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பவர்களில் சிலர் இறந்து விட்டனர். ஆனால் இறந்தவர்களின் சடலங்களை அரசாங்கம் ஒரே தடவையில் வழங்காதுள்ளது.
தமது பிரதேசத்தில் உள்ள குடிநீரில் இரசாயனம் கலந்துள்ளதாகவும் அதற்கு தீர்வை பெற்று தருமாறும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது, பொறுப்புமிக்க அரசாங்கம், வாக்காளர்களை பாதுகாக்க மறந்து விட்டு, தேர்தலுக்கு செலவிட்ட சிறிய தரப்பினரை பாதுகாத்துள்ளது.
தேர்தலுக்கு பணத்தை செலவிட்டவர்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் ரத்துபஸ்வல பிரதேசத்தை நந்திக்கடல் களப்பாக மாற்றியது. இதனால் அன்று பிரபாகரன் மீது பயம் கொண்டிருந்த மக்கள், இன்று பிரபாகரனை விட அரசாங்கத்தை கண்டு அஞ்சியுள்ளனர் எனத் தெரிவித்தார்.
வெலிவேரிய சம்பவத்தில் இறந்த அகிலவின் இறுதி கிரியையில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு
ரதுபஸ்வல இரசாயன கழிவு நீர் பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த வியாழக்கிழமை முதலாம் திகதியன்று வெலிவேரிய நகர மத்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் உயிரிழந்த அகிலவின் இறுதிகிரியைகள் நேற்று இடம்பெற்றன.
சுத்தமான குடிநீர் கேட்டு கடந்த வியாழக்கிழமை முதலாம் திகதி மாலை 5 மணியளவில் போராட்டம் நடத்திய வெலிவேரிய பிரதேச மக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 17 வயதுடைய இளைஞன் அகில உட்பட மூன்று பேர் பலியானதுடன் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்கள் ஒருவரான அகிலவின் இறுதிகிரியைகள் நேற்று இடம்பெற்றன. இதன்போது உறவினர்கள், நண்பர்கள், பாடசாலை மாணவர்கள் என ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten