[ திங்கட்கிழமை, 12 ஓகஸ்ட் 2013, 08:42.20 AM GMT ]
இந்த பேச்சுவார்த்தையின் போது, வடக்கு மாகாண சபை தேர்தல், தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கூட்டமைப்பு , அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையின் சுற்றுலா துறை மட்டுமல்லாது இலங்கையின் விமான சேவைகளை விரிவுப்படுத்தவும் அதிக சந்தர்ப்பங்களை பெற்று கொடுக்கும் என்று விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் பிரசன்ன விக்ரமசூரிய தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொள்கின்றனர்.
பொதுநலவாய மாநாடு விமான சேவைகளை விரிவுப்படுத்த சந்தர்ப்பத்தை பெற்று கொடுக்கும்: பிரசன்ன விக்ரமசூரிய
[ திங்கட்கிழமை, 12 ஓகஸ்ட் 2013, 08:52.23 AM GMT ]
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
54 நாடுகளை சேர்ந்த அரச தலைவர்கள், வெளிநாட்டு அமைச்சர்கள், பிரதிநிதிகள் என பலர் அந்தந்த நாடுகளின் விமான நிலையங்களில் இருந்து இலங்கைக்கு செல்ல உள்ளனர்.
இதனால் இலங்கை விமான துறை தொடர்பில் அவர்களுக்கு சிறந்த புரிந்துணர்வை வழங்க முடியும்.
2009 ஆம் ஆண்டிற்கு பிறகு ஆசிய பிராந்திய நாடுகளில் மிகவும் பாதுகாப்பான நாடு இலங்கையாகும்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் இந்த நிலைமையை ஏற்படுத்த கிடைத்த சந்தர்ப்பம் மிகப் பெரிய வெற்றி என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten