தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 14 augustus 2013

இந்தியாவுக்கு ஆயுதங்களை விற்கவில்லை! பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை பொய்!- இலங்கை இராணுவ பேச்சாளர்

குடும்பப் பெண் மீது இராணுவ உடை தரித்தோர் துஸ்பிரயோகம்! ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!
[ செவ்வாய்க்கிழமை, 13 ஓகஸ்ட் 2013, 06:11.00 PM GMT ]
கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச செயலக பிரிவில் உள்ள வினாசியோடை கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு ஆபத்தான நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் 38 வயதுடைய தாய் வாய்களை பச்சைத் துணிகளால் கட்டிய பச்சை உடை தரித்த இருவரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

தனது குடும்ப வருமானத்திற்காக பனை ஓலையில் பொருட்கள் செய்து விற்கும் இப் பெண் ,இன்று மாலை 4.30க்கும் 5.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வழமை போன்று பனை ஓலை எடுப்பதற்கு சென்ற வேளை இராணுவ உடையில், பச்சைத் துணிகலால் வாய்களை கட்டிய இருவர் அப் பெண்னை பலாத்காரம் செய்த விட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

கடும் இரத்தப் போக்குடன் பூநகரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டும் இரத்தப் போக்கு கட்டுப்படாததனால் மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பற்ற நிலையில் வசிக்கும் நிலை நீடிப்பதுடன் பெண்களின் நிலை யுத்தகாலத்தை விட ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத் தக்கது

பூநகரி பிரதேச செயலக பிரிவில் 6000 குடும்பத்திற்கு 30 000 இராணுவத்தினர் குவிக்கப்பட்டு மக்கள் மீது அதீத அழுத்தங்களும் இராணுவ அடாவடிகளும் அதிகரித்த நிலையில் இன்றைய இச் சம்பவம் இவ்வாறு ஒரு பெண்ணை ஆபத்தான நிலைக்கு தள்ளியுள்ளது என்பது வேதனைக்குரியதே என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கு ஆயுதங்களை விற்கவில்லை! பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை பொய்!- இலங்கை இராணுவ பேச்சாளர்
[ செவ்வாய்க்கிழமை, 13 ஓகஸ்ட் 2013, 04:24.51 PM GMT ]
இலங்கையிடம் இருந்து இந்தியா ஆயுதங்களை வாங்கியதாக வெளியான செய்திகளை  இலங்கையின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய நிராகரித்துள்ளார்.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே அந்தோனி நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் முப்படைகளுக்காக, ரஸ்யா, இஸ்ரேல், பிரித்தானியா, அமெரிக்கா, சுலோவாக்கியா, போலந்து, பின்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து 23.5 பில்லியன் ரூபா பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவின் பிரிஐ செய்தி நிறுவனம் மற்றும், ஊடகங்கள் பலவும் இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தன.
இது பொய்ச்செய்தி என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஒருபோதும் இந்தியாவுக்கு ஆயுதங்களை விற்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten