இந்தியப் பிரதமர், தமிழர்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தாமல் மனதிலே கொண்டு, இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்று திட்டவட்டமாகவும், வெளிப்படையாகவும் தெரிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இலங்கை விடுதலை அடைவதற்கு முன்பும், விடுதலை அடைந்த பின்னரும்; பண்டித நேரு, அன்னை இந்திரா அம்மையார், இளந்தலைவர் ராஜீவ் ஆகியோர் காலத்திலும்; ஈழத் தமிழர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட எந்த ஒப்பந்தத்தையும் நிறைவேற்றாமல் அவற்றை மீறி, சர்வதேசக் கண்ணோட்டத்தில் நம்பகத்தன்மையை முழுவதுமாய் இழந்து நிற்கிறது.
இலங்கை. இந்தியாவுக்கும், தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் எதிராகவே இலங்கை தொடர்ந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
ராஜீவ் காந்தி– ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின்படி உருவான இலங்கை அரசமைப்பின் 13–வது சட்டத் திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான அனைத்து வகை முயற்சிகளையும் சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இன்றைக்கு வந்துள்ள செய்தியில் கூட, கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 49 மீனவர்களில் 8 பேர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
எஞ்சிய 41 பேருக்கு ஆகஸ்ட் 21ம் தேதி வரை சிறைக் காவலை நீட்டித்து மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக மீனவர்களைக் கைது செய்வதும், அவர்களை இலங்கைக்குக் கொண்டு சென்று நீதிமன்றத்தில் நிறுத்துவதும், அண்மைக் காலமாக தொடர்ந்து இலங்கை கடற்படையினர் கடைப்பிடித்து வரும் நடைமுறையாகும்.
தமிழக மீனவர்களின் கதி பற்றி நமது வேண்டுகோளின்படி இந்திய அரசு இலங்கைக்குப் பலமுறை கடிதங்களை எழுதியும், தூதுவரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியும் அதைப்பற்றி இலங்கை அரசு இம்மியளவு கூட காதில் போட்டுக் கொள்வதாகத் தெரியவில்லை.
இந்தச் சூழ்நிலையிலே தான் தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சியினரும், ஏன் அனைத்துத் தமிழ் மக்களும், உலகத் தமிழர்களும் ஒருமனதாக இந்திய அரசு நவம்பர் திங்களில் இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று வேண்டிக் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.
ஆனால் கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வரும்படி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நேரில் அழைப்பு விடுப்பதற்காக நாளை இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பீரீஸ் டெல்லிக்கு வருவதாக செய்தி வந்துள்ளது.
இந்த நேரத்தில் இந்தியப் பிரதமர்; தமிழர்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தாமல்; மனதிலே கொண்டு, இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்று திட்டவட்டமாகவும், வெளிப்படையாகவும் தெரிவிக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த வேண்டுகோளையும் இந்திய அரசு புறக்கணிக்குமானால், கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்கின்ற நிகழ்வைக் கண்டித்து, தமிழ் மக்களின் உணர்வையும், கண்டனத்தையும் வெளிப்படுத்த அந்நாளில் தமிழர் இல்லங்கள் தோறும், வணிக நிலையங்கள் தோறும் கறுப்புக் கொடி ஏற்றுதல், ரயில் நிறுத்தப் போராட்டம் போன்றவைகளில் ஈடுபட நேரிடும் என்பதை மத்திய அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
http://www.tamilwin.net/show-RUmryISbMVjr6.html
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெலத் மாநாட்டை புறக்கணிக்கவேண்டும்: BTF
17 August, 2013 by admin
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வரும் கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை, பொறுப்புக்கூறும் தன்மையின்மை மற்றும் தண்டனைகளற்ற குற்றம்புரி கலாசாரம் ஆகியவை பற்றி எடுத்துக்கூறிய பிரித்தானிய தமிழ் மக்களின் தூதுக்குழு வரலாற்றுரீதியாகவும் சமகால நிகழ்வுகளாகவும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் விளைவுகள் குறித்து விளக்கமளித்தனர். 2009 ஆம் ஆண்டு தமிழ் மக்களை பாதுகாப்பதற்கும் இற்றைவரை இலங்கையை பொறுப்புக்கூற வைப்பதற்கும் பிரித்தானியா தவறியமையை இவர்கள் கண்டனம் செய்ததுடன் இதன் காரணமாகவே இலங்கை அரசாங்கம் தொடர்ந்து துஸ்பிரயோகங்களை மேற்கொள்வதற்கான நிலைமை உருவாகியிருப்பதாகவும் எடுத்துரைத்தனர். யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியிருக்கின்ற போதிலும் பிரித்தானியாவின் 'ஈடுபடுதல் மற்றும் செல்வாக்குசெலுத்துதல்' (நபெயபநஅநவெ யனெ இகெடரநன்உந) என்ற மென்போக்கு அணுகுமுறை ;பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நீதியினை பெற்றுக்கொடுக்காத நிலையினையும்; இந்த தூதுக்குழு சுட்டிக்காட்டியது.
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டை புறக்கணிக்க வேண்டும் அல்லது பிறிதொரு நாட்டில் இந்த மகாநாட்டை நடத்தவேண்டும் என்ற தூதுக்குழுவின் வலியுறுத்தலுக்கு பதிலளித்த, அமைச்சர் இலங்கையில் நடைபெறும் இந்த மகாநாட்டில் கலந்துகொள்வது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் ஒரு தீர்மானத்தினை எடுத்திருப்பதாகவும் இது பொதுநலவாயத்தின் முக்கியத்துவம் மற்றும் இலங்கையின் கள நிலைமைகளை மகாநாட்டில் கலந்துகொள்பவர்கள் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பு ஆகியவற்றினை கருத்தில்கொண்டு எடுக்கப்பட்டது என்று கூறினார். இந்த மகாநாடும் அது ஏற்படுத்தி இருக்கின்ற கவனயீர்ப்புமானது இலங்கை மீதும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் அல்லது பின்னடைவு தொடர்பிலும் ஒரு மதிப்பீட்டுப் பார்வையை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்த அமைச்சர் மார்ச்சில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை ஆதரித்தது போன்று பிரித்தானியா இலங்கை தொடர்பில் தனது விசனத்தை வெளிப்படுத்துவதில் தெளிவாகவே இருந்து வந்துள்ளதாகவும் எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டிலும் அவ்வாறே செயற்படும் என்றும் கூறினார்.
அமைச்சரின் இந்த கருத்துக்களுக்குப் பின்னர், பிரித்தானிய தமிழ் மக்களின் தூதுக்குழு தமிழ் மக்களின் சார்பாக பின்வரும் கேள்விகளை எழுப்பி பிரித்தானிய அரசாங்கம் அவற்றை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது. பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமரின் முடிவு ஐ நா உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையின் ஆகஸ்ட் மாத அறிக்கை மற்றும் செப்ரெம்பரில் நடைபெறவிருக்கும் வட மாகாண சபைக்கான தேர்தல் ஆகியவற்றின் முடிவுகளைப் புறம் தள்ளி நிபந்தனையற்று அமையுமா ? பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டின் பின்னரான பிரித்தானிய அரசாங்கத்தின் திட்டங்கள் என்ன ? ஏன் பிரித்தானியா தனது கருத்தாடல்களில் (னுளைஉழரசளந) இலங்கை மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டை சேர்த்துக்கொள்வதில்லை ?
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டை பிரித்தானியா புறக்கணிக்க வேண்டும் என்றும் பிறிதொரு நாட்டில் மகாநாடு நடத்தப்பட வேண்டும் என்றும் பிரித்தானிய தமிழர் பேரவை பிரித்தானிய அரசாங்கத்தை; தொடர்ந்து வலியுறுத்தும். இலங்கையின் போர்க்குற்றம், மனிதாபிமானத்துக்கெதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குற்றம் ஆகியவை தொடர்பில் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையின் மூலம் நீதியினை பெற்றுக்கொள்வதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை தொடர்ந்து செயற்படும்.
Geen opmerkingen:
Een reactie posten