புதிய பிரதமா் ஒருவரை நியமிப்பது தொடா்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினா்களுடன் கலந்துரையாடி வருவதாக கூறப்படுகின்றது.
பிரதமர் பதவிக்காக அமைச்சா்களான பேராசியரியா் ஜி.எல.பீரிஸ் நிமல் சிறிபால டி சில்வா, பசில் ரஜபக்ச ஆகியோரின் பெயா்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
புதிய பிரதமா் தொடா்பாக இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து அரசாங்கம் ஆலோசித்து வரும் நிலையில் இன்னும் முடிவுகள் எடுக்கப்படவில்லை.
தற்போதைய பிரதமா் டி.எம்.ஜயரட்ன அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இந்த ஆண்டு தை மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனாலும் புதியதாக ஒருவா் தெரிவாகும் வரை அவரைப் பிரதமாராக தொடர்ந்து பதவி வகிக்குமாறு ஜனாதிபதி கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten