தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 12 augustus 2013

த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், சீ.யோகேஸ்வரன் அவுஸ்திரேலியா விஜயம்!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அவுஸ்திரேலியா கிளையின் செயற்திட்டங்களில் கலந்து கொள்வதற்காக கடந்தவாரம் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்திருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அவுஸ்திரேலியாக் கிளை கடந்த வருடம் தேசிய மட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.
இவ்அமைப்பு சிட்னி, மெல்பேர்ன், கன்பரா உட்பட எல்லா மாநிலங்களிலும் தமது செயற்திட்டங்களை புலம்பெயர்வாழ் தமிழ் மக்கள் மத்தியில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இவ்வாறான செயற்திட்டங்களின் ஒரு நிகழ்வாக கடந்த வாரம் சிட்னி, மெல்பேர்ன் கன்பரா போன்ற மாநிலங்களுக்கு கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அத்துடன், வடக்கு கிழக்கில் வாழும் தமிழ்த் தேசிய மக்களின் அரசியல் அபிலாசைகளையும், தற்போதைய அரசியல் நிலைப்பாட்டையும் புலம்பெயர் மக்கள் மத்தியில் எடுத்துரைத்தது மட்டுமன்றி, தற்போதைய வடக்கு மாகாணசபைத் தேர்தல் பற்றியும் இதில் தமிழ் மக்களின் பங்கு எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும் தெளிவு படுத்தினார்கள்.
வடக்கு மாகாணசபைக்கு நேர்மையான தேர்தல் நடக்குமா? மக்கள் சுதந்திரமாக வாக்களித்தல் அங்கு சாத்தியமாகுமா? என்ற மக்களின் வினாக்களுக்கு விரிவாக விளக்கம் அளித்தார்கள்.
மேலும் அவுஸ்ரேலியத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்திட்டங்கள் பற்றியும் காலத்தின் தேவை கருதி சகல தமிழ் அமைப்புகளும் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.


Geen opmerkingen:

Een reactie posten