maandag 12 augustus 2013

வன்சொல் பயன்பாட்டுக்கு எதிரான சட்டமூலம்! அமைச்சர் வாசுதேவ சம்ர்ப்பிப்பு! - மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கூடுதல் அதிகாரம் அவசியம் – மஹானாமஹேவா !

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வன்சொல் பாவனைக்கு எதிரான சட்டமூலம், சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
தற்போது இந்த சட்ட மூலத்துக்கு அமைச்சரவை அந்தஸ்து கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், அமைச்சரவை உபகுழு இதனை பரிசோதித்து வருகிறது.
உபகுழு இதனை உறுதிப்படுத்திய பின்னர், இந்த சட்டமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மதம் இனம் சார்ந்த மற்றும் மற்றவர்களின் மனத்தையும், உணர்வுகளையும் காயப்படுத்தும் வகையிலான வார்த்தைகளை பொது இடங்களில் பயன்படுத்துவதற்கு இந்த சட்டமூலத்தின் ஊடாக தடை செய்ய அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கூடுதல் அதிகாரம் அவசியம் – மஹானாமஹேவா
மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கூடுதல் அதிகாரம் அவசியம் என ஆணைக்குழுவின் தலைவர் பிரதீபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.
மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரங்களை வலுப்படுத்தும் வகையிலான அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.
மனித உரிமை ஆணைக்குழுவினால் செய்யப்படும் பரிந்துரைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாவிட்டால், அது தொடர்பில் உயர் நீதிமன்றில் முறைப்பாடு செய்யக் கூடிய வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.
தற்போதைய சட்டங்களின் அடிப்படையில் முறைப்பாடுகளை விசாரணை செய்து, அவற்றுக்கான பரிந்துரைகளை செய்யவே சந்தர்ப்பம் காணப்படுகின்றது.
பரிந்துரைகளை அமுல்படுத்தும் அதிகாரம் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கிடையாது.
புதிய சட்டத் திருத்தங்களின் மூலம் காத்திரமான சேவையை வழங்க முடியம் என ம

Geen opmerkingen:

Een reactie posten