கைகளினால் சிவப்பு மையினால் எழுதி இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுக் காணப்படுகின்றன. மதுவுக்கும் புகைத்தலுக்கும் எதிரானவர்களினால் இவை ஒட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
யாழ். நகரை அண்டிய நாவலர் வீதி மற்றும் சில இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் மற்றும் வாகனங்களில் செல்லும் பலரும் பாதசாரிகளும் நின்று இவற்றை படித்துச் செல்வதைப் பார்க்கக் கூடியதாக உள்ளது.
சட்டவிரோத மதுபான விற்பனை கடந்த மாதம் 73 வழக்குகள் பதிவு
யாழ். மதுவரி நிலைய அதிகாரிகளால் கடந்த மாதத்தில் 73 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மதுவரி நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
சாராயம், கள்ளு, பியர் என் பவற்றின் மீதான பரிசோதனையின் போது கடந்த மாதத்தில் மட்டும் 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக யாழ்.நீதவான் நீதிமன்றம் மற்றும் ஊர் காவற்றுறை நீதவான் நீதிமன்றம் என்பவற்றில் இவ்வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.
இவ்வழக்குகள் மூலம் 54 ஆயிரம் ரூபா அபராதம் விதிக் கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த யூன் மாதத்திலும் இவ்வாறு 89 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதாக வும், இதன்மூலம் ஒரு இலட்சத்து 7 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten