donderdag 8 augustus 2013

முல்லைத்தீவில் வீடொன்றில் கொள்ளையிட்ட இருவருக்கு 6 வருட கடூழியச் சிறைத் தண்டனை - சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபருக்கு விளக்கமறியல்!


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது பாராளுமன்ற பணிக்காலம் வரும் ஒக்ரோபருடன் நிறைவு: பிரதமர் வி.உருத்திரகுமாரன்
[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 10:47.54 AM GMT ]
இலங்கைத்தீவில் சுதந்திர தமிழீழத்துக்கான போர்தான் ஓய்ந்ததே அன்றி போராட்டம் அல்ல என்பதனை முரசறைந்து முகிழ்ந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது பாராளுமன்ற பணிக்காலம் நிறைவுகாணவிருக்கின்றது.

 
தமிழீழத் தாயகத்தில் நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை மே 2009ம் ஆண்டில், பெரும் இனஅழிப்பு ஒன்றின் ஊடாக அழித்து விட்டதாக சிங்களம் யுத்தவெற்றி களிப்பில் இருந்தவேளை, இலங்கைத்தீவுக்கு வெளியே பரந்து வாழ்கின்ற புலம்பெயர் தமிழர்கள், தங்களின் அரசியல் அபிலாசையினை சனநாயக முறையிலான தேர்தல் ஒன்றின் ஊடாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கிக் கொண்டனர்.
12க்கும் மேற்பட்ட நாடுகளில் தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட 115 மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது பாராளுமன்றம், அமைச்சரவை, மேற்சபை, நெறிமுறை ஆணையம், தேர்தல் ஆணையம், மதியூரைக்குழு என்ற அலகுகளைக் கொண்டு இயங்குகின்றது.
இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது பாராளுமன்ற மூன்றாண்டு பணிக்காலம் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்துடன் நிறைவு செய்கின்ற நிலையில், மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கமைய ஒக்ரோபர் 1ம் திகதியுடன் பாராளுமன்றத்தினை கலைத்துக் கொள்வதாக பிரதமர் வி.உருத்திருமாரன் அவர்கள் அறிவித்துள்ளார்.
கடந்த 03-08-2013ம் நாள் இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற கூட்டத்திலேயே இந்த அறிவிப்பினை பிரதமர் வி.உருத்திருமாரன் அவர்கள் வெளியிட்டிருந்தார்.
எதிர்வரும் ஒக்ரோபர் 1ம் திகதியுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும், தொடர்ந்து தேர்தல்மூலம் வருகின்ற அடுத்த பாராளுமன்ற பணித் தொடங்கும் வரை, தற்போதுள்ள  அமைச்சரவை நடைமுறையில் இருக்கும் எனவும் பிரதமர் வி.உருத்திருமாரன் அவர்கள் தெரிவித்தார்.
பராளுமன்றத்தில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களினால் இந்த அறிவித்தல் உத்தியோகபூர்வமாக விடுக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் தேசங்களெங்கும்  தேர்தலுக்கான பணிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

முல்லைத்தீவில் வீடொன்றில் கொள்ளையிட்ட இருவருக்கு 6 வருட கடூழியச் சிறைத் தண்டனை - சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபருக்கு விளக்கமறியல்
[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 10:28.35 AM GMT ]
முல்லைத்தீவு தேராங்கண்டல் பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட இருவருக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் 6 வருட கடூழியச் சிறைத் தண்டனையை வழங்கியுள்ளது.
கடந்த மே மாதம் 16 ஆம் திகதி குற்றவாளிகள் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட இருவருக்கும் மூன்று குற்றச்சாட்டுகளுக்கு தலா இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை என்ற கணக்கில் ஆறு வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களை முறைப்பாட்டாளரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
முல்லைத்தீவில் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் விளக்கமறியல் 
முல்லைத்தீவு மூங்கிலாறு பிரதேசத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, கர்ப்பிணியாக்கிய சந்தேக நபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
அயல் வீட்டில் வசித்து வரும் சந்தேக நபர், வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
சிறுமி வயிறு பெருத்திருப்பதை அவதானித்த தாய், சிறுமியிடம் காரணத்தை கேட்ட போது, அயல் வீட்டை சேர்ந்த நபர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் இதனை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் சிறுமி கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரிடம் தாய் முறைப்பாடு செய்ததை அடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமி 08 மாத கர்ப்பிணியாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten