[ சனிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2013, 02:44.24 PM GMT ]
தமிழ்நாடு வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று முன்தினம் கைதான இலங்கைத் தமிழ் அகதிகள் 46 பேரும் இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
நாகப்பட்டினம் வேளாங்கண்ணியிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு பிழைப்பு தேடி போவதற்காக தனியார் விடுதியில் வந்து தங்கிய இலங்கை அகதிகளை கியூ பிராஞ்ச் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வேளாங்கண்ணியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இலங்கை அகதிகள் 46 பேர் வந்து தங்கியிருப்பதாக கியூ பிராஞ்ச் பொலிஸாருக்கு தெரியவர, விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர்.
வேளாங்கண்ணியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இலங்கை அகதிகள் 46 பேர் வந்து தங்கியிருப்பதாக கியூ பிராஞ்ச் பொலிஸாருக்கு தெரியவர, விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர்.
பிறகு கைது செய்த அகதிகளை புத்தூர் மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்களிடம் உரிய விசாரணை நடத்தி விலாசங்களை கேட்டு பதிவு செய்து கொண்டனர்.
அதன்படி அவர்கள் வேளாங்கண்ணியிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு பிழைப்பு தேடி போவதற்காக வந்ததாக தெரிகிறது.
அவர்களை இரவு 11 மணிக்கு பொலிஸ் வானில் ஏற்றிக்கொண்டு வந்து காலை 8.30 மணிக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அங்கு இலங்கை அகதிகளோ வேளாங்கண்ணி கோயிலுக்கு சுற்றுலாவாத்தான் வந்தோம்.
இலங்கை தமிழர்னு தெரிஞ்சாலே சந்தேக கண்ணோட பார்த்து அவுஸ்திரேலியாவிற்கு தப்பிப்போவதா பழிய போட்டு கைது பண்ணிடறாங்க.எங்கள ஜாமீன் எடுக்க கூட நாதி கிடையாது என்று கலங்கினர்.
அதன் பிறகு 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார் நீதிபதி. அதன்படி புழல் சிறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten