கூட்டமைப்பு அமோக வெற்றி பெறும்! அரசின் பொய் பிரச்சாரங்களுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்: இரா.சம்பந்தன்
[ செவ்வாய்க்கிழமை, 20 ஓகஸ்ட் 2013, 03:32.41 AM GMT ]
அரசு தற்போது வெளியிடும் பொய்யான கருத்துக்கணிப்பைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாணசபையைக் கைப்பற்றுவது அரசாங்மாக அல்லது கூட்டமைப்பா என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக ஐந்து தேர்தல் தொகுதிகள் திகழ்கின்றன. 14 தேர்தல் தொகுதிகளில் ஐந்தில் கூட்டமைப்புக்கும், நான்கில் அரசுக்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும நேற்றுத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன்,
"வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பின் மாபெரும் வெற்றியை வடக்கு மக்கள் நிரூபித்துக் காட்டுவார்கள். இந்நிலையில் அரச அமைச்சர்கள் வெளியிடும் முட்டாள்தனமான - பொய்யான கருத்துகளுக்கு நாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. மக்களே இதற்கான பதிலை தேர்தலில் வழங்குவார்கள்.
அரசானது தேர்தலை நீதியாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். அதை விடுத்து, ஆளுக்கு ஆள் மாறி மாறி கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்த்தல் வேண்டும்'' - என்றார்

அமைச்சர் பீரிஸ் விரோத மனப்பான்மையுடன் பேசுவதாக தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டு- 20 இந்திய சிறைக் கைதிகள் இந்தியாவிற்கே மாற்றம்
[ செவ்வாய்க்கிழமை, 20 ஓகஸ்ட் 2013, 03:38.35 AM GMT ]
அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இரு நாட்டு மீனவர்களுக்குமிடையே விரோத மனப்பாங்கை வளர்ப்பதாக தமிழக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இலங்கையில் இடம்பெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியப் பிரதமரை நேரில் அழைக்க புதுடெல்லி சென்றிருந்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்த கருத்துக்களுக்கே தமிழக மீனவர்களின் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பிறகு டெல்லியிலுள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய- இலங்கை மீனவர்களிடையே உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், அமைச்சரின் கருத்துக்கள் ஒரு நல்லுறவோடு பேசுவதுபோல தங்களுக்கு தெரியவில்லை என்று தமிழ்நாடு விசைப்படகு மீனவர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் கருத்துக்கள் தமிழக மீனவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது எனவும் அவர் கூறுகிறார்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ இருநாட்டு மீனவர்களுக்கும் இடையே ஒரு நல்லுறவை ஏற்படுத்த எடுத்த நடவடிக்கைகளுக்கு மாறக பேராசிரியர் பீரிஸின் கருத்துக்களை உள்ளடக்கிய அறிக்கை, தமக்கிடையே மேற்கொண்டு ஒரு பெரிய விரோதத்தை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது என்றும் மீனவர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, இந்திய மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு, 13ம் திருத்தச்சட்டத்தை மாற்றாமல், அதனை உடனடியாக அமுலாக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது வடமாகாண சபைத் தேர்தல், 13ம் திருத்தச்சட்டம், மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளன. வடக்கில் சுதந்திரமான முறையில் தேர்தல் நடத்தப்படும் என்று ஜீ.எல். பிரதமரிடம் உறுதியளித்துள்ளார்.
20 இந்திய சிறைக் கைதிகள் இந்தியாவிற்கே மாற்றம்
இலங்கையில் இருந்து 29 இந்திய சிறைக் கைதிகள் இந்தியாவுக்கே மாற்றப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடந்i 2010ம் ஆண்டு ஜுன் மாதம் 31ம் திகதி மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இந்த கைதிகள் இந்தியாவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதன்படி தமிழகத்தைச் சேர்ந்த 14 கைதிகளும், கேரளாவைச் சேர்ந்த 6 பேரும் முதல் கட்டமாக கடந்த பெப்ரவரி மார்ச் மாதங்களில் மாற்றப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து இந்த மாதம் தமிழகத்தை சேர்ந்த 9 பேர் இந்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten