யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற ரோஸா பஸ் வண்டியுடன் மணல் ஏற்றி வந்த டிப்பர் லொறி நேருக்கு நேர் மோதியதனால் பஸ் வண்டியில் பயணித்த 16 பேர் காயங்களுடன் தொம்பே மாவட்ட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 6 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். 4 பேர் கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பஸ்ஸின் சாரதி மற்றும் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தொம்பே ஆஸ்பத்திரியின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் பூகொட பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மாத்தறைப் பிரதேசத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சுற்றுலா மேற்கொண்ட தனியார் வகுப்பொன்றின் மாணவ மாணவிகளும் ஆசிரியர்களுமே பஸ்ஸில் பயணித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten