தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 17 augustus 2013

லண்டனில் நடைபெறும் உலகத் தமிழியல் மாநாடு!- ஈழ ஆதரவு மாநாடா?

மருதானை விபச்சார விடுதியொன்றில் மட்டக்களப்பை சேர்ந்த பெண்கள் கைது! அதிர்ச்சித் தகவல்!
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 11:35.53 PM GMT ]
கொழும்பு, மருதானைப் பகுதியில் புதன்கிழமை விபச்சார விடுதியொன்றை பொலிஸார் முற்றுகையிட்டபோது கைது செய்யப்பட்ட பெண்களில் அதிகமானோர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பில் வேலைக்கு செல்கின்றோம் என்று சென்றவர்களே இவ்வாறு விபச்சாரத்துக்குள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருதானையில் உள்ள வீடு ஒன்றை நீதிமன்றத்தின் முன் அனுமதியை பெற்று குற்றச் செயல்கள் மற்றும் ஊழல்களுக்கு எதிரான பொலிஸார் சோதனை செய்த போது 08 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் ஒருவர் கர்ப்பிணி. கணவர் இவரை கைவிட்டு சென்று விட்டார். நிதித் தேவைகள், வாழ்வாதாரம் போன்றவற்றை நிறைவு செய்கின்றமைக்காக இப்பெண் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
கைதானவர்களில் அநேகர் 24 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். களுவாஞ்சிக்குடி, ஏறாவூர் போன்ற இடங்களை சேர்ந்தவர்கள். ஒருவர் ஜாஎலவை சேர்ந்தவர்.
இவர்கள் அனைவரும் மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டனர். இந்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் எதிர்வரும் 23 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்வாதாரத்துக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு செல்வதானது வேதனைக்குரியமாகவுள்ளது.

லண்டனில் நடைபெறும் உலகத் தமிழியல் மாநாடு!- ஈழ ஆதரவு மாநாடா?
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 03:28.09 PM GMT ]
உலகத் தமிழியல் ஆய்வு நடுவம் என்னும் அமைப்பினால், லண்டனில் நடத்தப்படும் உலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டை ஈழ ஆதரவு மாநாடு என்று இலங்கை அரசாங்க தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
லண்டனில் நடத்தப்படும் உலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து வந்த நான்கு இலங்கை விரிவுரையாளர்கள் ஒரு ஈழ ஆதரவு மாநாட்டில் கலந்து கொள்ள வந்ததாகவும், அந்த மாநாட்டை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்வதாகவும், ஆதரவு வழங்குவதாகவும் இலங்கை அரசாங்க தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விரிவுரையாளர்கள் நாடு கடந்த அரசாங்கத்தினால் நடத்தப்படும் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றதாக இலங்கையின் கூட்டுப்படைகளின் தளபதியான ஜெனரல் ஜகத் ஜயசூரிய கூறியிருந்தார்.
இந்த மாநாடு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்த விரிவுரையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவியான பேராசிரியர் க்ஸானிக்கா ஹிறிம்புறேகமவும் பிபிசியிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இந்த மாநாட்டின் நோக்கம் என்ன என்றும் அதற்கு ஈழ ஆதரவு என்ற நோக்கமும் உள்ளதாக என்றும் அதனை நடத்தும் உலகத் தமிழியல் ஆய்வு நடுவத்தின் நிறுவனரான செல்லத்துரை செல்வராசா அவர்களைக் கேட்ட போது,  அதனை மறுத்துள்ள அவர், இது தமிழ் ஆய்வு மாநாடு மாத்திரமே என்றும் கூறினார்.
தான், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், 6 மாதங்களுக்கு முன்னதாக அதனை இராஜினாமா செய்து விட்டதாகவும் அவர் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten