[ திங்கட்கிழமை, 19 ஓகஸ்ட் 2013, 07:06.09 AM GMT ]
இதனால் விமான நிலையத்திற்கு சென்ற 20 இலங்கை பிரஜைகள் பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டதாக தெரியவருகிறது.
சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் ஊழியர் 20 போலி விமான பயணச்சீட்டுகளை கொடுத்து பணத்தை அறவிட்டுள்ளார்.
ஒரு பயணச்சீட்டுக்கு 720 யூரோக்கள் அறவிடப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 14 ஆயிரத்து 400 யூரோக்கள் அறவிடப்பட்டுள்ளது.
இந்த பயணச்சீட்டுகளுடன் இலங்கைக்கு செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்றவர்கள் ஏமாற்றதுடன் திரும்பிச் சென்றனர்.
ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 30 இலங்கை பிரஜைகளிடம் இவ்வாறான பயணச்சீட்டு மோசடி மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
பொதுநலவாய மாநாட்டை எந்த நாடும் புறக்கணிக்காது- 15 நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையில் ஆய்வு
[ திங்கட்கிழமை, 19 ஓகஸ்ட் 2013, 02:47.29 AM GMT ]
இந்த மாநாட்டுகக்கான ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக, பொதுநலவாய நாடுகளின் செயற்குழு பணிப்பாளர் ரிச்சர்ட் உகு உள்ளிட்ட, 17 நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரிச்சர்ட் உகு, இந்த முறை இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் அனைத்து நாடுகளும் பங்கேற்கும்.
எந்த ஒருநாடும் இதனை புறக்கணிக்காது என்று தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமை மீறல்களை கருத்தில் கொண்டு, இந்த மாநாட்டை கனடா புறக்கணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது.
எனினும் கனடாவும் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாடு: 15 நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையில் ஆய்வு
இலங்கையில் எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆய்வுகளை நடத்த கனடா உட்பட 15 நாடுகளின் பிரதிநிதிகள் பலர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இலங்கையில் தங்கியுள்ளனர்.
பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதில்லை என கனடா அறிவித்துள்ள நிலையிலும் அந்த நாட்டின் பிரதிநிதி ஒருவர் இலங்கை வந்திருப்பது சிறப்பம்சம் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மூன்று தினங்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இந்த வெளிநாட்டு பிரதிநிதிகள், இலங்கையின் பாதுகாப்பு நிலைமை, போக்குவரத்து, தங்குமிட வசதிகள் தொடர்பில் ஆராயந்துள்ளனர்.
இவர்கள் இன்று இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ளனர். அதேவேளை மேலும் ஒரு வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கை செல்ல உள்ளது.
இவர்களும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு தொடர்பான ஏற்பாட்டு விடயங்கள் குறித்து ஆராயவுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten