தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 9 juni 2013

மக்களின் சுற்றுலா மையமாக விளங்கும் கடற்புலிகளின் கப்பல் கட்டுமிடம்!


ழைய சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்ட்கள் - பத்து பாதாள உலகக் குழுக்களின் தலைவர்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 04:11.20 AM GMT ]
பழைய சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்ட்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
சாரதிகளின் சகல தகவல்களையும் ஒரே கணனி கட்டமைப்பின் கீழ் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறு ஸ்மார்ட் கார்ட்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வேரஹெல, ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் பழைய சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொடுத்து ஸ்மார்டு கார்ட்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து விரைவில் ஸ்மார்ட் கார்ட் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்படுகிறது.
பொதுத்துறையில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கையில் உயர்வு
பொதுத்துறையில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
2012ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2013ம் ஆண்டில் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 90 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
அரச பொது நிர்வாக அமைச்சு இந்த புள்ளி விபரத் தகவலை வெளியிட்டுள்ளது. ஊழல் மோசடிகள், பொதுமக்களின் தேவைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றவில்லை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிராக அதிகளவான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
பத்து பாதாள உலகக் குழுக்களின் தலைவர்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர்
பத்து பாதாள உலகக் குழுக்களின் தலைவர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் முக்கியமான பத்து பாதாள உலகக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் உலகின் முன்னணி நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இங்கிலாந்து, சிங்கப்பூர், இத்தாலி, மலேசியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இவர்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொலை, போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
மக்களின் சுற்றுலா மையமாக விளங்கும் கடற்புலிகளின் கப்பல் கட்டுமிடம்!
[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 11:41.00 PM GMT ]
கடற்புலிகளின் கப்பல் கட்டுமிடம் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கப்பல் கட்டும் இடத்தை ஏராளமான மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
மிக நீண்ட காலமாக விடுதலைப் புலிகளின் பயன்பாட்டில் இருந்து வந்த இந்த கப்பல் கட்டுமிடம் யுத்தத்திற்குப் பின்னர் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இதில் கடற்புலிகளின் படகுகள், உற்பத்தி செய்யக் கூடிய மாதிரிகள் மற்றும் படகுகளின் இயந்திரங்கள் என்பன காணப்படுகின்றன.
முல்லைத்தீவு வீதியில் உள்ள இரட்டைவாய்க்கால் பகுதியில் இந்த கப்பல் கட்டுமிடம் அமைந்துள்ளது.
இந்தக் கப்பல் கட்டும் இடம் மக்களின் சுற்றுலாத் தலமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


Geen opmerkingen:

Een reactie posten