vrijdag 7 juni 2013

இந்தியா ஒதுங்கிக் கொள்ள வேண்டும்! எச்சரிக்கிறார் சம்பிக்க ரணவக்க

வர்த்தகர் கொலை தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது
[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 11:08.10 AM GMT ]
கொழும்பு பம்பலபிட்டியவில் கடந்த வாரத்தில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட வர்த்தகர் ஒருவர் தொடர்பில் உதவி பொலிஸ் அதிகாரி ஒருவரும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
இலங்கையின் குற்றப்புலனாய்வு பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.
அத்துடன், உதவி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவிடமும் குற்றப்புலனாய்வு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
கடந்த மே 22 ஆம் திகதி இந்த கடத்தலும் கொலையும் இடம்பெற்றது.
இதன்போது வர்த்தகரான 35 வயது மொஹமட் ஷியாம் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
கடத்த செல்லப்பட்ட இவரின் சடலம் தொம்பே என்ற இடத்தில் இருந்து மீட்கப்பட்டது.
2ம்இணைப்பு
கொலைச் சம்பவமொன்று தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை
வர்த்தகர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
கடந்த மே மாதம் 23ம் திகதி பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வர்த்தகர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் உள்ளிட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வர்த்தகர் தொம்பே பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியதன் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்தியா ஒதுங்கிக் கொள்ள வேண்டும்! எச்சரிக்கிறார் சம்பிக்க ரணவக்க
[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 11:09.30 AM GMT ]
இலங்கை மற்றும் சீனா நாடுகளுக்கு இடையிலான உறவு விவகாரத்தில் இந்தியா ஒதுங்கி நிற்க வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
காஸ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் இலங்கை எவ்வாறு தலையிடாமல் இருக்கிறதோ, அதேபோன்று, சீனாவுடனான எமது உறவுகள் விவகாரத்திலும் இந்தியா தலையிடக் கூடாது.
உண்மையில் சீனாவுடன் இந்தியா மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக உள்ளது. இரு நாடுகளும் தமக்கிடையான பிரச்சினைகளை சுதந்திரமாக தீர்த்துக் கொள்ள வேண்டும்.
ஏனைய நாடுகள் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான போர் வலயமாக இலங்கையினைப் பயன்படுத்திக் கொள்ள எம்மால் அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டதுடன் 1962ம் ஆண்டு சீன - இந்தியப் போரின் போது,இலங்கை, பர்மா, கானா, கம்போடியா, எகிப்து, இந்தோனேசியா ஆகிய அணிசேரா நாடுகளின் கூட்டத்தைக் கூட்டி, அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க இருநாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையை தீர்த்து வைத்தார்.
அப்போது சிறிமாவோ பண்டாரநாயக்க நடவடிக்கை எடுக்காமல் போயிருந்தால் இந்தியாவின் ஒருபகுதி அப்போதே சீனாவின் கட்டுப்பாட்டில் சென்றிருக்கும்.
 உலகம் முழுவதிலும் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் பொருளாதாரங்களில் சீனா முக்கியமான பங்கை வகிக்கிறது.
உலகின் 60 சதவீதமான முதலீட்டு நிதியும், மூலதன வளங்களும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. நாம் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும், அது தான் உண்மை.
இது ஒன்றும் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினையல்ல. இலங்கையின் முன்னேற்றத்தைக் குழப்புவதற்கு வடக்கு மக்களைப் பயன்படுத்த இந்தியா முற்பட்டால், நாமும் அதற்கெதிராக செயற்படுவோம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை, சீன உறவுகள் வலுப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுவது தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

Geen opmerkingen:

Een reactie posten