[ திங்கட்கிழமை, 10 யூன் 2013, 08:22.56 AM GMT ]
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
ஒவ்வொரு நாளும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவதும், பல நேரங்களில் நமது மீனவர்கள் அதனால் கொல்லப்படுவதும் அன்றாட தொடர் நிகழ்ச்சியாகி விட்டது.
இத்தகைய சூழலில் இலங்கை இராணுவத்தின் விங் காமாண்டர் பண்டார தச நாயகேவுக்கும், மேஜர் ஹரிசந்திராவுக்கும் இந்த மே மாதம் 27 ஆம் தேதியில் இருந்து குன்னூர் வெலிங்டனில் இந்திய இராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக மக்களும் - தமிழ்நாடு அரசும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த பின்னரும், திருட்டுத்தனமாக தமிழ்நாட்டில் சிங்கள இராணுவத்தினருக்கு மத்திய அரசு பயிற்சி கொடுப்பது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.
இந்தியாவின் வேறொரு மாநில மக்களின் தொப்புள்கொடி உறவுகளை கொன்று குவிக்கும் பிறநாட்டு இராணுவத்தை இந்தியாவுக்கு அழைத்து வந்து விருந்து வைக்க முடியுமா? பயிற்சி தர முடியுமா?
தமிழ்நாட்டை - தமிழக மக்களை கிள்ளுக் கீரையாக நினைத்து மத்திய காங்கிரஸ் அரசு இந்த அக்கிரமத்தைச் செய்கிறது.
இதில் மிக அதிர்ச்சி தருகின்ற செய்தி யாதெனில், மே 27 ஆம் தேதி அன்று தஞ்சாவூரில் இந்திய இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, “இலங்கை இராணுவத்துக்கு தமிழ்நாட்டில் பயிற்சி தருவது இல்லை” என்று கூறினார். ஆனால், அந்தத் தேதியில் இருந்துதான் சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சியே தொடங்கி உள்ளது.
அப்படியானால், இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகள் அமைச்சர் அந்தோணிக்கு தெரியாமலே நடக்கிறதா?
இந்திய இராணுத் துறையை சிங்கள அரசே இயக்குகிறதா?
இந்திய இராணுவத் தளபதிகளும், அதிகாரிகளும் ஏ.கே.அந்தோணியை முட்டாள் ஆக்குகின்றனரா?
அல்லது தமிழக மக்கள் கண்களில் மண்ணைத் தூவி விடலாம் என்று கருதிக்கொண்டு அந்தோணி செயல்படுகிறாரா?
தலைமை அமைச்சர் டாக்டர் மன்மோகன்சிங் இதனை எல்லாம் அறிவாரா? அறிய மாட்டாரா?
இந்திய இராணுத் துறையை சிங்கள அரசே இயக்குகிறதா?
இந்திய இராணுவத் தளபதிகளும், அதிகாரிகளும் ஏ.கே.அந்தோணியை முட்டாள் ஆக்குகின்றனரா?
அல்லது தமிழக மக்கள் கண்களில் மண்ணைத் தூவி விடலாம் என்று கருதிக்கொண்டு அந்தோணி செயல்படுகிறாரா?
தலைமை அமைச்சர் டாக்டர் மன்மோகன்சிங் இதனை எல்லாம் அறிவாரா? அறிய மாட்டாரா?
ஈழத்தில் தமிழினப் படுகொலைக்கு உடந்தையாகச் செயல்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், அதில் பங்கேற்ற கட்சிகளும் தமிழ் இனக்கொலையின் பொறுப்பாளிகள் ஆவார்கள்.
இலங்கையில் 2009 க்குப் பின்னரும் ஈழத் தமிழர்கள் வதைக்கப்படுவதும், தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றம் நடைபெறுவதும், தமிழர் பகுதிகள் இராணுவ முகாம்களாகத் தொடர்வதும் இன்று வரை தொடர்கதையாகிக்கொண்டு இருக்கிறது.
இக்கொடுமைகளை எதிர்த்து தமிழ்நாட்டின் மாணவர்கள் இலட்சக் கணக்கில் போர்க்கொடி ஏந்தி, அறவழியில் கிளர்ச்சி செய்தனர். இதற்குப் பின்னரும் தமிழர்களுக்கு எதிராக இந்தியாவின் மத்திய அரசு செயல்படுவது நெருப்போடு விளையாடுகிற விபரீதமாகவே விளையும்.
உடனடியாக சிங்கள இராணுவத்தினர் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்ல, இந்தியாவில் இருந்தே வெளியேற்றப்பட வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்கும், தமிழ் இனத்துக்கும் தீங்கும் துரோகமும் செய்து வரும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு உரிய நேரத்தில், உரிய விதத்தில் தமிழக மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
2ம் இணைப்பு
இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி கூடாது: ஜி.கே.மணி
இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி கூடாது என்று பாமக தலைவர் ஜி.கே.மணி அறிக்கை ஒன்றில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
இலங்கை இராணுவத்தை சேர்ந்த உயரதிகாரிகள் இருவருக்கு நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள இராணுவ பயிற்சிக் கல்லூரியில் மே 27ம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்காக அந்நாட்டு அதிபர் ராஜபக்ச மற்றும் இராணுவ உயரதிகாரிகள் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று ஒட்டு மொத்த தமிழகமும் வலியுறுத்தி வரும் நிலையில், சிங்கள அதிகாரிகளுக்கு தமிழகத்திலேயே இராணுவ பயிற்சி அளிப்பது தமிழக மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயலாகும்.
இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற போரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை சிங்களப் படையினர் படுகொலை செய்தனர். இலங்கை இனப்படுகொலையை நடத்திய சிங்களப் படையினருக்கு இந்தியா தான் பயிற்சி அளித்ததாக இலங்கை அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது.
தமிழக மீனவர்கள் மீதும் சிங்கள கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஈழத்தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் படுகொலை செய்த சிங்களப் படையினருக்கு இந்தியாவில் எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிக்கக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
அதை மதிக்காமல் கடந்த ஆண்டு சென்னை தாம்பரத்திலும், ஊட்டி வெலிங்டனிலும் சிங்களப் படையினருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்ட போது அதைக் கண்டித்து தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதையடுத்து தமிழகத்தில் பயிற்சி பெற்று வந்த இலங்கை ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் பெங்களூர் மற்றும் டேராடூனுக்கு அனுப்பப்பட்டனர். அதுமட்டுமின்றி, தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்தது.
கடந்த சில நாட்களுக்கு முன் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணியும் இதை உறுதி செய்திருந்தார். அந்தோணி இவ்வாறு அறிவித்த அதே நாளில், அதே நேரத்தில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு வெலிங்டனில் பயிற்சி தொடங்கப்பட்டிருப்பது மத்திய அரசின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.
ஒருபுறம் தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதாக கூறிக் கொண்டு, இன்னொரு புறம் சிங்களப் படையினருக்கு பயிற்சி அளித்து தமிழக மக்களின் உணர்வுகளை மிதிப்பது கண்டிக்கத் தக்கதாகும்.
இலங்கை இராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பது முறையல்ல. தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, வெலிங்டனில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சியை நிறுத்தி அவர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும்.
இலங்கைப் படையினருக்கு இந்தியாவின் எந்தப் பகுதியிலும் இனி பயிற்சி அளிக்கப்படாது என்று அறிவிப்பதுடன், இலங்கை ஆட்சியாளர்கள் மற்றும் இராணுவ தளபதிகள் மீது போர்க்குற்ற நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி, இனப்படுகொலை பூமியான இலங்கையில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டை வேறு நாட்டிற்கு மாற்றவும், கொமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கவும் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் கோரிக்கை ஆகும்.
இந்தக் கோரிக்கையை நிறைவேற்றவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இலங்கைப் பிரச்சினையில் இரட்டை வேடம் போடுவது - மத்திய அரசா? ஜெயலலிதாவா?: கருணாநிதி கேள்வி
[ திங்கட்கிழமை, 10 யூன் 2013, 08:58.14 AM GMT ]
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். அதில்,
இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் உள்ள மற்ற உணர்வுகளை திமுக மதிக்கின்றது.
இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது பற்றி திமுக உணர்வும் அதுதான்.
ஆனால், பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனி, இலங்கை இராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்க மாட்டோம் என்று உறுதி அளித்து விட்டு, இப்போது மீறுவது மத்திய அரசின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார் ஜெயலலிதா.
இலங்கைப் பிரச்சினையில், மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக ஜெயலலிதா குற்றம் சாட்டுகிறார். இதே இலங்கைப் பிரச்னையில் ஜெயலலிதா போடாத இரட்டை வேடமா?
16.4.2002ல் பிரபாகரனை இலங்கை அரசு கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் முன்மொழிந்தார்.
இந்திய அரசு இலங்கையின் அனுமதியுடன் படையை அனுப்பி, பிரபாகரனை சிறைப் பிடிக்க உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாரே.. அது இரட்டை வேடம் இல்லையா?
அப்பாவித் தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்று குவித்த போது, இறுதிப் போர் நேரத்தில் ராஜபக்ச நடத்தும் யுத்தம் தமிழர்களை எதிர்த்து அல்ல, விடுதலைப் புலிகளை எதிர்த்துதான் என்றாரே அது இரட்டை வேடம் இல்லையா?
17.1.2009ல் இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என இலங்கை இராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான் என்றாரே.. அது இரட்டை வேடமா? கபட நாடகமா?
இவ்வளவையும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகச் செய்துவிட்டு தற்போது மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக கடிதம் எழுதியிருக்கிறார்.
அதே நேரம், இராணுவ அதிகாரிகளுக்கு வெலிங்டனில் பயிற்சி அளிப்பதை எதிர்த்து அவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டும் என போராடிய 136 பேரை அரசின் காவல்துறை கைது செய்துள்ளது.
கடிதத்தில் தெரிவித்திரூக்கும் கருத்துகள் உண்மையா? போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்தது உண்மையா ? எது இரட்டை வேடம் என ஜெயலலிதா விளக்குவாரா என கருணாநிதி அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்த அறிக்கை மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக ஜெயலலிதா கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு பதிலே தவிர, இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை நியாயப்படுத்துவதாக அர்த்தம் ஆகாது என்றும் குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.
Geen opmerkingen:
Een reactie posten