zaterdag 8 juni 2013

புலிகளின் பணத்தை வங்கியில் இட்ட ரெஜிக்கு எதிராக மீண்டு பிடியாணை !


இப்படியும் நடக்குமா ? பிரகீத் எக்நெலிகொட பெயரில் அசேலம் !
07 June, 2013 by admin
லங்கா ஈ நியூஸ் இணைய தளத்தின் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று தெரிவித்துள்ளார். இதேவேளை இவரைக் காணவில்லை என்று பல மாதங்களாக இலங்கையிலும் பல வெளிநாடுகளிலும் போராட்டங்கள், மற்றும் கவனயீர்ப்புகள் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்க விடையம். ஆனால் அப்பொழுது எல்லாம் கண்டுகொள்ளாத இலங்கை அரசு இப்ப விசாரணை நடைபெறும் என்று சொவது மிகவும் ஆசாரியமனவிடையம் ஆகும். இதற்கு என்ன பின்னணி என்று பார்ப்பதற்கு முன்னர், மற்றுமொரு சுவாரச்சியமான விடையத்தை இங்கே பார்ப்போம். சமீபத்தில் பாராளுமறில் உறையாற்றிய ஆழும் கட்சி எம்.பி பிரகீத் எக்நெலிகொட பிரான்சில் வசிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

ஆனால் பிரான்ஸ் நாட்டில் இலங்கையர் ஒருவர் தனது பெயர் பிரகீத் எக்நெலிகொட என்று சொல்லி, அன் நாட்டில் அகதிகள் அந்தஸ்தைக் கோரியுள்ளாராம். குறிப்பிட்ட இன் நபர் சிங்களவர் ஆவார். அவரும் அவரது மனைவியும் பிரான்ஸ் நாட்டில் கையைத் தூக்கி அசேலம் அடித்துவிட்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட வின் பெயரைப் பாவித்துள்ளார்கள். இதனை அறிந்த சிலர் ஆழும் கட்சி எம்பிக்கு தகவல் சொல்லி இருக்கிறார்கள். இதனை நம்பியே அவர் பாராளுமன்றில் பிரகீத் எக்நெலிகொட உயிருடன் இருப்பதாகவும், அவர் பிரான்சில் வசித்துவருவதாகவும் கூறியுள்ளார். ஆனால் பிரான்சில் வசித்துவரும் அச் சிங்களவர் உண்மையான பிரகீத் எக்நெலிகொட இல்லை என விடையம் அறிந்த ஒரு சிங்கள இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதனை விட அவர்கள் ஒரு படி மேலே சென்று, பாராளுமன்றில் இக் கூற்றைக் கூறிய எம்.பி வெளிநாட்டுக்கு ஆட்கடத்தலில் ஈடுபடுபவர் என்றும், அவரால் அவ்வாறு அனுப்பப்பட்ட நபர் ஒருவரே எம்.பியின் கூற்றுக்கு அமைவாக இப் பெயரில் அசேலத்தை அடித்தார் என்றும் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது ஒரே கல்லில் 2 மாங்காய். பிரகீத் எக்நெலிகொட பெயரில் அசேலம் அடித்தால், பிரான்ஸ் அரசு அசேலம் வழங்கும். இதேவேளை அவர் பிரான்சில் தான் இருக்கிறார் என்று குறிப்பிட்ட எம்.பி கூறியதில் டெக்னிக்கலாகப் பார்த்தால் தவறில்லையே.... கவுண்டமணி செந்தில் வாழைப்பழ யோக் போல இருக்கல ?

புலிகளின் பணத்தை வங்கியில் இட்ட ரெஜிக்கு எதிராக மீண்டு பிடியாணை !
08 June, 2013 by admin
விடுதலைப் புலிகளின் பணத்தை இலங்கையில் உள்ள வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வங்கிகளில் வைப்பிலிட்டார் என்ற குற்றத்துக்காக ரெஜி எனப்படும் நபருக்கு இலங்கை அரசு மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளது. ஆரம்ப காலத்தில் தமிழர் புணர்வாழ்வுக் கழகத்தின் பொறுப்பாளராக இருந்த ரெஜி, இலங்கையில் உள்ள வெளிநாட்டு வங்கி ஒன்றில் சுமார் 86 மில்லியன் ரூபாவை வைப்பிலிட்டுள்ளார். அத்தோடு சில உள்நாட்டு வங்கிகளிலும் பணத்தை வைப்பிலிட்டுள்ளார். இது விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான பணம் என்று சொல்லி இலங்கை அரசு அதனை சமீபத்தில் வங்கியிடம் இருந்து பறிமுதல்செய்துள்ளது. இலங்கையில் தமிழ் புணர்வாழ்வுக் கழகம் அரச சார்பற்ற நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டு இயங்கிவந்தது. குறிப்பாக 2004ம் ஆண்டு சுணாமி இலங்கையை தாக்கியவேளை பாரிய மீட்ப்பு நடவடிக்கையை இவர்கள் மேற்கொண்டு இருந்தார்கள்.

புலம்பெயர் தமிழர்களால் இன் நிறுவனத்திற்கு பல நிதி உதவிகள் வழங்கப்பட்டது. அப் பணத்தையே அவர் கொழும்பில் வைப்பில் இட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இலங்கை அரசு தமிழர் புணட்வாழ்வுக் கழகத்தை புலிகளின் அமைப்பு என்றுசொல்லி தடைசெய்துவிட்டு, தற்போது அதன் நிதியை தான் கையகப்படுத்தப் பார்க்கிறது. இதேவேளை ரெஜி எனப்படும் நபருக்கு ஏற்கனவே சர்வதேச (இன்ரர்போல்) பிடியானை இலங்கை அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை அரசானது மீண்டு ஒரு பிடியாணையை இன்ரர்போல் ஊடாக பிறப்பித்துள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

Geen opmerkingen:

Een reactie posten