[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 11:19.58 AM GMT ]
சீனா தொடர்பாக இந்த இணையம் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட இலங்கை- பிரித்தானிய தம்பதியினரின் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் வாழ்வுரிமை கட்சி பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு 2.2 பில்லியன் டொலர் கடனை வழங்க சீனா இணங்கியுள்ளது. அதில் இராணுவத் தளபாடங்களை வழங்கும் இணக்கப்பாடும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொருளாதாரத் திட்டங்கள், படையினருக்கான பயிற்சி போன்றவையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் நெருடலான உறவைக் கொண்டுள்ள இலங்கை, கடந்த பத்தாண்டுகளில் சீனாவிடம் இருந்து பொருளாதார, இராணுவ உதவிகளைப் பெறும் நாடாக இருப்பதுடன், சீனாவுடன் மிகவும் நட்புறவையும் கொண்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்க எதிரான போரின் போது, சீனாவிடம் இருந்து முக்கியமான இராணுவ உதவிகள் இலங்கைக்கு கிடைத்தன.
தனது நாட்டில் உள்ள தமிழர்களின் அரசியல் பிரச்சினை காரணமாக, இந்தியாவினால் இலங்கையுடன் அதிகம் நட்புறவு கொள்ள முடியாது என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை- பிரித்தானியத் தம்பதி கடத்தல் தொடர்பில் வாழ்வுரிமை கட்சி பிரமுகர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 11:43.56 AM GMT ]
லண்டன் வாழ் இலங்கை தம்பதியினரான தவராஜா- சலஜா ஆகியோர் கடந்த 29ம் திகதி விமானத்தில் சென்னைக்கு வந்தனர். இருவரையும் விமான நிலையத்தில் இருந்து ஒரு கும்பல் காரில் கடத்தி சென்றது. ரூ.2 கோடி கேட்டு லண்டனில் இருக்கும் தவராஜா மகள் தர்ஷினியிடம் கடத்தல் கும்பல் மிரட்டியது.
சென்னை பொலிசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கடலூர் அடுத்த மந்தார குப்பத்தில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த இலங்கை- பிரித்தானிய தம்பதியை மீட்டனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற பெண் தலைமை ஆசிரியர் இந்திரா உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, லண்டனில் உள்ள தவராஜாவின் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கும் இலங்கையை சேர்ந்த அஜந்தனை லண்டன் பொலிசார் கைது செய்தனர். இவர்தான் கடத்தல் கும்பலுக்கு இலங்கை தம்பதியின் படங்கள், பயண விவரம் பற்றி மின்னஞ்சல் அனுப்பி உள்ளார்.
இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக கடலூர் மந்தார குப்பத்தை சேர்ந்த சத்யா என்பவர் சேர்க்கப்பட்டார். இவர் கடத்தலுக்கு சதி திட்டம் தீட்டி கொடுத்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதான சத்யா தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் எனவும் பா.ம.க.வில் இருந்து பிரிந்து சென்ற வேல்முருகன் ஆரம்பித்த அக்கட்சியில் சத்யா பணியாற்றி வந்து உள்ளார்.
அண்ணாநகர் உதவி ஆணையாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் பொலிசார் சத்யாவை கடலூரில் கைது செய்து சென்னை கொண்டு வந்தனர். அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Geen opmerkingen:
Een reactie posten